Wednesday, 30 November 2011

புவி வெப்பமாவதை தடுக்க நம்மால் இயன்றது








அன்பான இதயங்களே   வணக்கம

இன்றைய உலகம் படிப்படியாக வெப்பமடைதுகொண்டே வருகின்றது
வட  மற்றும்  தென்  துருவங்களில்  இருக்கும்  பனிமலைகள்  கொஞ்ச
கொஞ்சமாக  உருகி  வருவதால்  கடல் மட்டம் உயர்ந்து வருவது யாவரும்
அறிந்ததே .

உலகை காத்து வரும் ஓசோன் படலமும் ஓட்டை வீழ்ந்து வருகின்றது
அதனால் அமில மழை பல இடங்களில் பெய்ந்து கொண்டு வருவதும்
கவலை அளிப்பதாகும். மேலும், புறஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்தும் ,
மனிதகுலத்தை காக்கும் பெரும் பணியை செய்வதும் இந்த ஓசோன்
படலமேயாகும் .இதை காப்பது மனித குலத்தின் தலையாய கடமையாகும்.

கால பருவ மாற்றம் அடைந்து வருவதும் கவலை தருவதே ஆகும் ,
மழை குறைந்து வருவதும்,கவலைக்குரியதாகும் .

மழை நீர் மண்ணில் புக வழியின்றி கடலில் கலந்து வீணாவதும்
தவிர்க்கப்படவேண்டிய ஒன்று .

ஒலி மாசு இன்றைய நாகரீகத்தின் மிக மோசமான வெளிப்பாடு

கோடை காலத்தில் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே
வருவதும் வருத்தம் அளிக்க கூடியதே .

காற்றும் நாளுக்கு நாள் மாசு பட்டுக்கொண்டே வருகின்றது உயிர் வளி
என்று சொல்லக்கூடிய பிராண வாயுவின் [ஆக்சீசன் ] சதவிகிதம் குறைந்து
உடல் ஆரோக்கியம்  உலகெங்கும் கெட்டு வருவதும் ஒன்றும் மகிழ்ச்சி
 தரக்கூடிய தகவலும் அல்ல .இதெல்லாம் புவி வெப்பமடைதலின் காரணத்தால்தான், மேலும்  இதற்க்கு காரணம் மனிதனின் நாகரீகத்தின்
மோகம் என்பதை மறுக்கலாகாது .இயற்க்கை மிக உன்னதமானது
அதை பேணி காப்பது மனிதனின் தலையாய கடமைகளில் ஒன்று

முதலில் கடல் மட்டம் ஏன் உயருகின்றது என பார்ப்போம் பனிமலைகள்
தூய வெண்மையாக இருப்பதால் சூரிய வெளிச்சத்தை உள் வாங்காமல்
ரிப்ளக்ட் ஆவதால் சூரியனின் வெப்பம்  பனிமலைகளை  தாக்காது ,
ஆதலால்,பனிமலைகள் உருகுவது தவிற்கப்படுகின்றது.
.
 ஆனால் இன்றைய விஞ்சான உலகில் தொழிற்கூடங்கள்,
வாகனப்பெருக்கம், போன்றவற்றால் வெளியிடப்படும் புகை,
குளிர்சாதன்களால் வெளியிடப்படும் [ குளோரோ -  புளோரோ  கார்பன்  ]
என்று சொல்லப்படும் நச்சு வாயு ,மற்றும்  காற்றில் கரிமில வாயு அதிகமாதல்.
இதனால் பணிமளைகளின் மீது கரிமில வாயு மற்றும் நச்சு வாயுக்கள்
 படிவதால் , வெண்மை  மங்கி சூரிய ஒளிக்கதிர்களை
ரிப்ளிக்ட் செய்யாமல் உள்வாங்குவதால் ,பனிமலைகள்
 உருகி கடல்மட்டம் உயர்ந்து வருவதால் கடலோர நகரங்கள் இருந்த சுவடே
 தெரியாமல் அழிந்து கொண்டே வருவதும் நாம் வரலாறுகளாக படித்தும்
 வருகிறோம், பார்த்தும்  கேட்டும்  வருகின்றோம்

இந்த நிலை மாற அல்லது குறைய நம்மால் இயன்றதை எவாறு செய்யலாம்
குறைந்தது ஒவ்வொரு நபரும்
ஆளாளுக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மரங்களைவளர்க்கலாம் ,

சமூக தொண்டாக காடுகள் வளர்ப்பதில் அக்கறை காட்டலாம் ,

 ஒரு மரத்தை வெட்டினால் பல மரங்களை வளர்க்க முற்ப்படலாம்,

மேலும் காற்றில் மாசு ஏற்ப்படுத்தாத புதுப்பிக்கவல்ல    எரிசக்திகளான சூர்யா வெளிச்ச மின்சாரத்தின் மூலம்  இயங்க கூடிய சாதனங்களை
 பயன்படுத்தலாம்



,குண்டு பல்புகளை பயன்படுத்துவதை தவிக்கலாம் ,

குளிர் சாதனங்களை பயன்பாட்டை குறைக்கலாம்,

வாகனத்தில் அதிகமாக    புகை  வரும் வாகனங்களை தவிர்க்கலாம்,




தொழிற்ச்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டின் மூலம் நச்சு புகைகளை
புதிய தொழில் நுட்பத்தின் மூலம் பில்டர் செய்து வெளியேற்றலாம்,




மழை உலகில் குறைவாகத்தான் பெய்கின்றது, அதிலும் பெறப்படும் மழை,
சேமிக்கப்படவில்லை .அந்த காலங்களில் அதாவது மன்னர் காலங்களில்
ஏரிகள் ,குளங்கள்,ஊருணி ,குடடைகள்,வெட்டப்பட்டன .ஆனால் நாம்
அந்த ஏரிகளையும்,குளங்களையும்,மறைத்து அல்லது மூடி கட்டிடங்களையும்
பங்களாக்களையும் ,எழுப்பி வருகின்றோம் இதனால் மழை நீர்
சேமிக்கப்படாமல்,வீணாக கடலில் கலக்க நாமே காரணமாக இருக்கின்றோம்
என்பதே உண்மை அது மட்டுமா நிலத்தடி நீர் வெகு வேகமாக குறைந்து
வருகின்றது ,இதனால் குடிநீர்   தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம் நம்மை
 சூழ்ந்துள்ளது   மேலும் நிலநடுக்கம் ஏற்ப்பட நிலத்தடி நீர் குறைவது ஒரு
காரணம் என விஞ்சானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைக்கு நாம்
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கும் முக்கிய காரணமாகும்
நிலத்தடி  நீர் மாசுபட்டுக்கொண்டே வருகின்றது,காரணம் ரசாயன
ஆலைகள், matrum   saaya   aalaikgal, அரசு எத்தனையோ, thittangalai  நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்க திட்டம் theettinaalum manasaatchi  illaatha


பிளாஸ்டிக்குகள் மக்காத ஒரு பொருள் அவைகள் நீரை மட்டுமல்ல ஒரு விதயைகூட மண்ணில் புதைந்து முளைக்க செய்யாது .
 ஆனால் நாம் பிளாஸ்டிக்குகளை அதன் தீமை அறியாமல் , அன்றாடம் பயன்படுத்துவதுதான் கொடுமையிலும் கொடுமை. ஆகவே பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்
.
ஒவ்வொரு மனிதனும் நிலத்தடி நீரின் அளவை மேம்படுத்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கலாம் .இதற்க்கு அரசும் மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கலாம் .[கடல் நீர் நிலத்தில் அடியில் புகுந்து கடலோர
மனித வாழ் பகுதிகளில் குடிநீரே கிடைக்காத நிலை உள்ளது என்பது
உலகறிந்த உண்மை ஆதலால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கண்டிப்பாக அனைவரும் அமைத்து நிலத்தடி நீரை காப்போம் என இந்த தருணத்தில் சபதமெடுப்பது அவசியமாகும் ]


காற்று மாசு படுவதற்கு மரங்களை வெட்டுவதும் காடுகள் அழிக்க படுவதும் முக்கிய காரணமாகும். மரம் கரிமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் தான் வளிமண்டலம் சமச்சீராக இயங்கி வருகிறது
இது இறைவன் படைப்புகளில் அதிசயமாகும் . மனித குலத்திற்கு இயற்க்கை அளித்த ஒரு வரமாகும். காடுகள் குறைந்தால்,  கரிமில வாயு அதிகரிக்கும் அபாயம் அதிகம் என்பதை மனிதன் உணர வேண்டும், காற்று மாசு படுவதிலிருந்து இவ்வுலகை காக்க நம்மால் இயன்றதை செய்கின்ற வகையிலே காடுகளை காக்க வேண்டும் மரங்களை புதியதாக வளர்க்க வேண்டும்.






அடுத்து ஒலி மாசு -ஒரு குறிப்பிட்ட டெசிப்பல் வரைதான் நம் உடல்
அல்லது காதுகள் ஒலியை ஏற்றுக்கொள்ளும்  ஆனால் நாம் வாகனங்கள் ,தொழிற்சாலைகள் ,பலவகையாக ஒலி மாசை ஏற்ப்படுத்தி
வருகின்றோம் .குறிப்பாக மருத்துவமனை அருகில் நோயாளிகளின்
நலனை கருத்தில் கொண்டு ஒலி எழுப்பாதே என  குறிப்பிட்டிருக்கும்
ஆனால் நாம் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அதிக டெசிபலுடன்
கூடிய ஒலிப்பானை பயன்பயுத்துவோம் இதெல்லாம் சரியா ?
குழந்தைகள் ,இதய நோயாளிகள் ,பாதிக்க படமாட்டார்களா ?
மனிதனுக்கு மனிதாபிமானம் வேண்டாமா இதையெல்லாம் தடுக்க நம்மால் ஆனதை செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே ..



உலகில் நவ  நாகரீகம் என்பது தவிக்க முடியாதது என்றாலும் கூட
ஒவ்வொருவரும் புவிவெப்பமடைதலை கவனத்தில் கொண்டு புவனத்தை காக்க முயற்சி மேற்கொள்ளும் வகையில் நம்மால் இயன்றதை உணர்வு பூர்வமாக செய்ய முன் வர வேண்டும்

பூமி பந்து தன் பரந்த   விரிந்த எண்ணிலடங்கா அதிசயங்களை
தன்னகத்தே கொண்டு, எல்லா ஜீவராசிகளையும்  தற்காத்து,தன்னையும்
 காத்துக்கொள்ள மனிதன்  தன்னுள்  இருக்கும் மனிதத்தை,
வெளிக்கொணர்ந்து ,  உலகில் உள்ள அனைத்து
அங்கங்களையும் காப்பதும்,அதை பேணுதலும்  அவசியம்.


.ஆகவேதான் நம்முடைய ஜீவாதாரமான ,இயற்க்கை அன்னை நமக்களித்த
அற்புதமான இந்த பூமியை அழிவிலிருந்தும்,சிதைவிளிருந்தும்,
காப்பாற்றுவதன், மூலம்,  பூமியில் வாழும் அனைத்து உயிர்களை
காப்பாற்றுவதுமட்டுமல்ல,நம்முடைய சந்ததிகளுக்கு
பின் வரும்,காலங்களுக்கு அற்புதமான,ஆச்சரியமான,
தூய்மையான,அழகான, ஆனந்தமான,விவரிக்க முடியாத விந்தைகளை
உள்ளடக்கிய,இந்த,நாம் வாழும் பூமிப்பந்தை ,பரிசாக விட்டுச்செல்வோமாயின்
அதுவே  மனிதன் மனிதத்துடன் வாழ்ந்ததின் அடையாளமாகும்.
                                                                                           அன்புடன்
                                                                                     *******************
                                                                                   வைத்திமுருகன்
                                                                                  

     
                                                                                     கைபேசி எண்-9894261297 
நண்பர்களின் புதுவைரகங்கள் திரை இசை குழு,
புதுச்சேரி -9 

No comments:

Post a Comment