உள்ளத்தின் குமுறலை ஒளியாக்கி
உலகத்தின் பார்வையை திசை மாற்ற
எண்ணத்தில் எல்லோரும் ஒன்றாக
எழுப்பிடும் ஓசையே மே தினம்
உழைக்கின்ற வர்கங்கள் ஒன்றாக
உரிமை குரல்தனை எழுப்பிட எத்தடை வந்தாலும் எதிர்நோக்கி
எழுகின்ற நாளன்றோ மே தினம்
தொழிலாளர் குருதியை பணமாக்கி
சுக வாழ்க்கை வாழ்ந்திடும் முதலாளி
முக மூட்டி கிழித்தே வெளியேற்ற
எழுச்சியின் புரச்சியே மே தினம்
தொழிலாளி உயர்ந்திட போராடி
உயிர் விட்ட ஒப்பற்ற தியாகிகள்
குருதியில் ஊறிய கொடியையே
உலகிற்கு தந்திட்ட மே தினம்
செங்கொடி பட்டொளி வீசிட
செங்குருதியின் பயனை நாம் அடைந்திட
மே தினம் போற்றியே வணங்குவோம்
மேதினி போற்றிட வாழுவோம்

No comments:
Post a Comment