Saturday, 12 November 2011

கடலுக்கு ஓர் வேண்டுகோள்





கடலம்மா கடலம்மா -நீ
காவு கொண்டது
2லச்சம் உடலம்மா

கரையோரம் வாழ்ந்தவரை -வாழ்வில்
கரையேற வைத்தவள் நீ
காற்று வாங்க வந்தவரை -தன்
கரங்களால் தாலாட்டி
மகிழ்ந்ததும் நீயே

உப்பாகி,உணவாகி,
உயிர்க்காக்கும் மருந்தாகி,
முத்தாகி, மீனவர் வாழ்வின் வித்தாகி,
உலகிற்கு வழியாகி
வந்தவளும் நீயே

அம்மா நீ குதித்து குதித்து
அலையாக   வந்த போதெல்லாம்
விளையாடி மகிழ்ந்தோம் -அதுவெல்லாம்
கனவாகி போனதேன் ?

அலையே நீ உன் அன்பு கரங்களால்
அரவனைத்ததை விடுத்து
26 / 12/2005 அன்று
சுனாமி என்ற அசுரக்கரங்களால்
மலையாக உயர்ந்து
மக்களை மண் மேடாய்
ஆக்கியது ஏன்?

ஊரையும் உறவையும்
உன்னோடு கவர்ந்து -எங்களை
மீளாத்துயரத்தில் அமிழ்த்தியது ஏன் ?

நாங்கள் கண்ணீரும் வற்றி
கருவாடாய் ஆனோம்
செந்நீரை சிந்தி
உருக்குலைந்து போனோம்

போதும் உன் சீற்றம்,
பொறுமையாய் இரு,
அன்பாய் இரு,அரவணைத்து செல்
எப்போதும் அன்னையாய்
எமை காத்து நில் ;;;

No comments:

Post a Comment