Saturday, 12 November 2011

குருதி ஈழம்



சிங்களத்து தீவினிலே
சிங்க தமிழ் வாடுது பார்
ஈழத்திலே நடக்கும் துயர்
என்னவென்று யாரறிவர்

துப்பாக்கி இடி இடிக்க
தோட்டாக்கள் மழை பொழிய
யாழ்ப்பாண வீதியிலே
ரத்த வெள்ளம் பாயுது பார்

வீட்டினுள் இருக்கும் -வீரத்
தமிழ் மகளை
வீதியிலே கொணர்ந்து -அவர்
விளையாடும் கொடுமையை பார்

காவியம் காத்து வந்த
கற்பு கலவாவதை பார்
பாவங்கள் அறியா சிறுவர்
படுகொலைகள் நடப்பதை பார்

சிங்களரின் இன வெறியால்
தமிழினமே அழியுது பார்
தான் ஆண்ட நாட்டிலயே
அகதியான கொடுமையை பார்

பாரே  பார்துதிருந்தும்
படுகொலைகள் நடப்பதை பார்
பாரா முகம் வேண்டாம்
பாரே உன் பார்வையினால்

பயந்து வாழும்
தமிழர்களை
பாதுகாப்பாய் கொணர்ந்து
இல் சேர்

1 comment:

  1. இந்த கவிதையில் பார் என்னும் வார்த்தையை எடுத்து
    விடுங்கள்.அது உங்கள் உணர்வை பிரதிபலிப்பது போல
    இருக்கும் என்பது எனது கருத்து.

    ReplyDelete