Wednesday, 23 November 2011

லஞ்சம்



 லஞ்சம் நம் நாட்டில்
அடைந்துவிட்டது தஞ்சம்
ஊழல் செய்யும் எத்தர்களுக்கு
வித விதமாக மஞ்சம்

தினம் பாடுபடும் மக்கக்ளுகோ
அடுக்கடுக்காக வஞ்சம்
லஞ்சம் இல்லா நிலைகளை
பார்க்க துடிக்குது தினம் நெஞ்சம்

ஒட்டு கேக்க வரும்போது தலை
வெளியே காட்டுவார் கொஞ்சம்
வோட்டு வாங்கி உயரே இருப்பவர்
ஒருவருக்கொருவர் போட்டி போடும் கஞ்சன்

கல்லூரியிலே லஞ்சம்
கடை வீதியிலும் லஞ்சம்
ஆக பூர்வ வேலைகளுக்கெல்லாம்
அளவிலாத லஞ்சம்

எல்லாவற்றிலும் கலப்படம் -லஞ்சத்தால்
எடுத்து கேட்க மனம் அல்லல் படும்
லஞ்சம் எனும் பெரும் சுமையாலே -நாடு
வளர்ச்சியின்றியே அவதிப்படும்

வீரமாக பேசிடுவர் நேரில் 
விளக்கம் கேட்டால் எசிடுவர்
தவறுகளை தட்டிக்கேட்பவர்
முகத்திலே கரி பூசிடுவர்

உரிமை குரல்தனை எழுப்பிடுவோம்
ஊழலாளிகளை அழித்திடுவோம்
கருப்பு பணத்தை வெளியே கொணர்ந்து
தாய் திரு நாட்டை காத்திடுவோம் 

No comments:

Post a Comment