Sunday, 6 November 2011

சா(தீ)

சாதி என்னும் சுடு
 நெருப்பை ஏற்றி விட்டு 
பின்னர் காலில் சுட்டு
 அவதியும் படுவதுண்டோ

சாதியில் தாழ்ந்தவரை
தரத்தினில் குறைந்தவரை 
வீதியில் வேட்டி கட்டி
நடக்கவும் கூடாதென்று

ஆதியில் சொல்லி வைத்த
 அக்கிரமக்காரர்கள் 
நீதி இன்றி கூறி
 நெறிகளை சாகடித்தர்


சாதியில் உயர்ந்தவருக்கு
 பாதி கை அதிகமுண்டோ 
தரத்தினில் குறைந்தவர்க்கு
 சிரத்தில்தான் குறையுமுண்டோ


இல்லை இல்லை பிரம்மனும்
அதுபோல் படைத்ததில்லை

சுரத்தினில் பாட்டமைத்த
தரத்தினில் உயர்ந்த அவ்வை 
கரத்தினால் எழுதிவிட்டார்
இட்டார் பெரியோர் என்றும் 
இடாதார் இழிகுலத்தார் என்றும்


பல கோரை புனைத்தால்
பாயாகலாம் 
பல விறகு எரித்தால்
 பெரும் தீயாகலாம்

இப்படியே நாம் இருந்தால்
 நன்மை ஏதடி
எல்லோரும் சேர்ந்து விட்டால்
 கவலை  ஏதடி ...!!



                                 உறக்கம்


இரவில் எண்ணம் எங்கோ பறக்கும்
இன்பம் துன்பம் இரண்டும் மறக்கும்

ஆசை பாசம் அனைத்தும் துறக்கும்
ஆனந்தமான தூக்கம் பிறக்கும்

கனவில் கதைகள் ஆயிரம் பிறக்கும்
காவியம் போலே கனவுகள் irukkum

இனியதென்றால் எண்ணm sirakkum
துயரமென்றால் வாழ்க்கை வெறுக்கும்

அது  முதல் கண் தூக்கத்தை  வெறுக்கும்
moodikkolla   kankal marukkum

1 comment:

  1. சூப்பர்!
    சா(தீ)யை சாகடிக்கும் தீ!!
    உங்கள் கவிதை தீ!!!

    ReplyDelete