Friday, 18 November 2011

தமிழ்ப்பற்று


[இந்த  பாடலை பாரதியின் வந்தே மாதரம் என்றுயிர் என்ற மெட்டில் பாடி மகிழவும் ]


வேற்று மொழி இங்கு வேரூன்றி வளர்வதை
பார்த்திட்டோம் பாடி வாழ்த்திடோம்
வேரூன்ற வருவதை வேருடன் கலைந்துமே
நசுக்குவோம் -தீயில் பொசுக்குவோம்

ஆயிரமாயிரம் அள்ளிக்கொடுத்தாலும்
ஆவதோ தமிழ் சாவதோ
அண்டை மொழியிங்கு ஆள நினைப்பதை
ஓட்டுவோம் துரத்திக்காட்டுவோம்

மத்தி மொழிகளுக்குத் தமிழடிமை
ஆகுமோ நெஞ்சு வேகுமோ
எத்தர் மொழி எங்கள் தைத்திருனாட்டிலே
ஓங்குமோ தமிழ் தூங்குமோ

கன்னித்தமிழ் விட்டு கள்ள மொழியினை
கர்ப்பதோ மானம் விர்ப்பதோ
கண்ணை குருடாக்கும் கண்ணாடியை ஏற்று
அணிவதோ அதற்க்கு பணிவதோ

செங்கதிர் போலவே செந்தமிழ் உயர்ந்திட
செல்லுவோம் களத்தில் வெல்லுவோம்
இந்தியை ஒழித்துமே எம்தமிழ் வானுக்கு
 எட்டுவோம் முரசு கொட்டுவோம்


                        தமிழ் அன்னை


[இந்த பாடலை பாரதியின் நெஞ்சில் உரமுமின்றி என்ற பாடலை போல் பாடி மகிழவும் ]



தமிழ் எங்கள் அன்னை என்பர்
தமிழ் மொழி உயர்ந்த்ததென்பர்
தாய் மொழிக்கீனம் வந்தால் -கிளியே
 தட்டிக்கேலாரடி

அண்டை மாநிலத்தார்
அவர் மொழி புகுத்தவந்தார்
 சித்தம் தெளியாமலே -கிளியே
சேர்த்து மகிழ்வாரடி

நன்மைகள் செய்வோமென்று
பேய் மொழி புகுத்தவந்தார்
கொத்திகுதர்வோமேன்று -கிளியே
கூவி எதிர்க்காரடி

தன்  தாயை தனளிலிலே
தள்ளி பொசுக்கும்போதும்
தடுத்து நிருத்தாரடி -கிளியே
தரம் கெட்ட மாக்களடி
பரமொழிக்கடிமை
பாங்குடன் செய்வோமென்று
தமிழ் பற்றுடன் கூறாரடி-கிளியே
பச்சோந்தி கூட்டமடி

இந்தி எனும் பேயை
இங்கிருந்து துரத்துவதே
கடமையாய்  கொல்லாரெல்லாம்-கிளியே
தாயையே மதிக்காரடி

























































































































No comments:

Post a Comment