Monday, 14 November 2011

ஏற்றம் எப்போ


ஏர் பிடிச்ச உழவனுக்கு
ஏத்தம் எப்போங்க -இத
எடுத்து நாம கேட்டுப்புட்டா
என்ன தப்புங்க

எருதை பூட்டி உழவனொருவன்
இறை ஓட்டுறான் அந்த
ஏழையின் உழைப்பிலொருவன்
காரை ஓட்டுறான்

கலை எடுக்க வந்தவர்க்கு
கஞ்சி கெடைக்கல -உழவன்
காசிளொருவன் காலையில
காப்பி குடிக்குறான்

கூலி உயர்த்தி கேட்டுப்புட்டா
குத்தமெங்குறான் -ஏழை 
கூழு கூட கெடககலேன்னு
நித்தம்  ஏங்குறான்

ஏர் உழவன் இந்நாட்டின்
முதுகுகெலும்பு  என்குறான் -உழவன்
உழைத்து உழைத்து முதுகுகெலும்பு
வளைந்து கெடக்குறான்

அடுக்கடுக்காய் பணத்தை பதுக்கி
அரசை ஏய்க்குறான் -உழவன்
அடுத்த வேலை உணவில்லாமல்
வாடி   வதந்குறான்

                உழவன்

பஞ்சமெனும் தரித்திரம் போக்கி
பசுமை எனும் சரித்திரம் படைத்து
வறுமை எனும் நோயை நீக்கி
பெருமையை நாட்டுக்கு தரும்
பொறுமையானவனே உழவன்

           அட்சய பாத்திரம்

நஞ்சையும் ,புஞ்சையும்
பஞ்சத்தை போக்கி -வயிற்றிற்கு
கஞ்சியும் கொடுத்து -உடுக்க
பஞ்சையும் கொடுக்கும் அட்சையபாத்திரம்

அட்சையபாத்திரம் ஆளும் முறையில்
அதிசய பத்திரம் -அதில்
உடல் அலைச்சலை கொடுத்து -விளைச்சலை
பெருக்கி -மன
உளைச்சலை நீக்கிடும் உழவனுக்கே -நம்
ஆயிரமாயிரம் சோத்திரம்


              நன் செய் [நஞ்சை ]
நஞ்சை எனும் வஞ்சிக்கொடி
காஞ்சி தர வந்தால்
அல்லல்படும் ஏழைகளின்
நெஞ்சிலே நிறைந்தால்

ஊருக்கெல்லாம் உணவளித்து
உள்ளம் மகிழ்ந்தாள்
பாரில் அவள் பசுந்தளிறாய்
பஞ்சமத்தை களைந்தால்

வேர்வை சிந்தி உழைப்பவருக்கு
வெள்ளாமை தந்தாள்
சோர்வை நீக்கி உழைப்பவருக்கு
இல்லாமை களைந்தால்

No comments:

Post a Comment