Monday, 14 November 2011

ராக்கெட்டில் ஏறும் விலை



விலைகள் ஏறுது ரகேட்டிலே
பணம்தான் இல்லை நம் பாக்கெட்டுலே
அரசியல்வாதிகள் பேச்செல்லாம்
ஆதாயம் தேடும் நோக்கத்திலே

அம்மா பசியென
 வாடிடும் மக்கள்
விலைகள் குறையுமா
என்ற ஏக்கத்திலே

ஆளுக்கு ஒரு கட்சி
மூளைக்கு ஒரு கட்சி
அவரர் கொடிகளும்
பறக்குது உயரத்திலே

ஆதரவின்றி அல்லல்
படும் ஏழை
அகாரம் இன்றி
தவிக்குறான் துயரத்திலே

எடுத்ததுக்கெல்லாம் ஒரு இயக்கம்
அரசிடம் எடுத்து கேட்கவே தயக்கம்
ஏறிடும் விளைவாசியினாலே -ஏழை
பசியால் அடையுறான் மயக்கம்

நல்ல திட்டத்தை வகுத்திடுங்கள்
ஏழை நிலைதனை கருதி
இல்லையேல் மானுடம் பசியால்
அழிந்திடும் இது உறுதி


        
        
                       ஏக்கம்
                    -------------


காலம் என் நெஞ்சத்தை வருடும்
காலனை ஒத்த விலைகளினாலிலே

உருப்படியின் விலைகளை கேட்டால்
உயிருள்ள ஜீவனும் உரையும்

உயரத்தில் தெரிவதெல்லாம் உரமற்று
உயர்ந்துவிட்ட உளமற்ற விலையேற்றம்

எண்ணினால் எதிர்காலத்தை
எண்ணங்கள் மறக்கும் இவ் உலகத்தை

என்றுதான் மாறும் இன்றைய நிலை
எல்லோருக்கும் தோன்றும் இன்பத்தின் கலை

விலை வாசி குறையுமா என்றே ஏக்கம்
அதுவரை இல்லையே ஏழைக்கு தூக்கம்     

No comments:

Post a Comment