பெண்கள் என்றிடில் அவள்
பேதை இல்லையே
பேறுகள் பெற்ற பல
மேதை இல்லையோ
வாய்ப்பு கிட்டிடின் பெண்
வானை எட்டுவாள்
வானை எட்டுவாள்
பாட்டில் பாரதி அன்று
பாடி வைத்தாரே
அடிமை என்று நாம்-அவளை
அடக்கிடலாமோ
ஆளத தகுந்தவள் -என்பதை
மறந்திடலாமோ
உன்னை பெற்றவள் -உன்
மகனை பெற்றவள்
தன்னை பணயமாய் -வைத்து
தாயும் ஆனவள்
விண்ணை எட்டிட்டால் -இன்று
விதியை வென்றிட்டாள்
கல்வி பெற்றிட்டால் -பல
கலையும் கற்றிட்டாள்
ஆணுக்கு நிகரென -அவளும்
நிமிர்ந்த்திட்டால்
வீணுக்கு நீயும் -அவளை
வீழ்த்தி பேசாதே ..
No comments:
Post a Comment