மனித ஜாதியே -நீர்
மனிதரல்லவோ
உரிமை கேளுங்கள் அந்த
உணர்வு இல்லையோ
அடிமை ஜனங்களை -நாம்
அவதிபடுவதோ
இக் கொடுமை தீரவே -எல்லாம்
கொதித்து எழுங்களேன்
உழைக்கும் வர்கத்தின் -உரிமை
பரிக்கப்படுவதோ
உணர்ச்சியின்றியே- மனிதம்
உறங்கிகிடப்பதோ
ஜாதி வேற்றுமை -நம்மில்
ஜாலமிடுவதோ
பேதமில்லையே யாரும் -ஒரு
தாயின் பிள்ளைகள்
கல்வி சாலைகள் -மண்ணில்
காசு பார்க்கவோ
களவு செய்வதை விட -இது
ஈனமஅல்லவோ
மருத்துவம் இப்போ
மருந்துக்கில்லையே
மறந்தும் கூட -ஏழைக்கு
கிடைக்கவில்லையே
நீதி கூட ஏழை
வீட்டை அடையனும்
வீதி வீதியாய்-தவறுகள்
ஓட்டி விரட்டனும்
இல்லை என்போர்க்கு -எல்லார்
இதயம் இறங்கனும்
ஏற்ற தாழ்வுகள் -இல்லா
நாட்டை பார்க்கணும்
அனைத்து உயிர்களும் -உயிராய்
மதிக்க படும்வரை
உண்மை சுதந்திரம் -என்றும்
உண்மையில்லையே

No comments:
Post a Comment