எங்கேயும் பார்த்ததில்லை
யாருமே சொந்தமில்லை
ஆளுக்கு ஆள் பார்த்துக்கொள்வோம்
அது முதல் நட்பாவோம்
பார்த்து பேசி பழகிடுவோம்
பகிர்ந்து கூட உண்டிடிவோம்
அடுத்தவர்க்கு உதவி செய்தே
அரவணைப்பாய் சென்றிடுவோம்
ஊர் கதையை பேசிடுவோம்
ஊர் பேர் அறிந்துகொள்வோம்
மணித்துளிகள் கரைந்து செல்லும்
மணித்துளிகள் பின்னே செல்லும்
பலத்தலைகள் கூடினாலும்
பல கலைகள் பினைந்துகொள்ளும்
புது உலகில் இருப்பது போல்
புரிந்தே எல்லாம் பழகிடுவோம்
அன்பாய் இணைந்திடுவோம்
அடுத்தவரோடு கலந்திவோம்
அவறவர் தடத்தில் இறங்கிக்கொள்ள
அனுமதியோடு கலைந்திடுவோம்
வெறுமையாய் உணர்த்திடுவோம்
அவாறவர் பணியில் மூழக்கிடுவோம்
ரயில் சிநேகிதம் ரயிலோடு
உறவும் உடமைகளும் நம்மோடு


நீங்க பாடகர்னு நிரூபிச்சீட்டீங்க, கடைசி வார்த்தைகள்
ReplyDeleteஒரே மாதிரி இருக்கு.
மழலை உலகம் மகத்தானது!
ReplyDeleteஇந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு)ரசிகன் அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
1.murugan
2.முனைவர்.இரா.குணசீலன்
3.vinayagamurthy
4கவிதை வீதி... // சௌந்தர் //
ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!