மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
--------------------------------------------------------------------------
ராயன் பட்டு என்ற சிறிய கிராமத்தில் நான்கு நண்பர்கள் இருந்தனர்
முரளி ,ராமன் குமார்,மற்றும் வைத்தி இவர்கள் எப்போதும்
இணை பிரியாமல்குமார்,மற்றும் வைத்தி இவர்கள் எப்போதும்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோசமாக இருந்தனர்
இவர்கள் நல்ல சிந்தனை ,உதவி மனப்பான்மை ,பல் நோக்கு சிந்தனை
என ஏராளமான சமூக சிந்தனை உடையவர்கள் .அதே ஊரில் ரமேஷ் என்ற
குதர்க்கவாதியும் இருந்தான் இவன் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்வான்
அது சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருவள் அகால மரணமடைந்துவிட்டால்
ஊரில் சிலர் இறந்த பெண் பேயாக வந்து உலவுவதாக புரளி ஏற்ப்பட்டு
சாயங்காலம் 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் வந்துவிடுவார்கள் அதனால்
ஊரே பயத்தால் மயான அமைதியாகிவிடும் இப்படி இருக்கையில் ஒரு நாள் நான்கு நண்பர்களும் பேயை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர்
அப்போது ஏட்டிக்கு போட்டி என்று அழைக்கப்படும் ரமேஷ் அங்கு வந்து
பேய் என்பதெல்லாம் பொய் நான் இரவு ஒரு மணிக்கு கூட எங்கு வேணாலும் தனியாக போவேன் பந்தயம் எவ்ளோ ?என்றான் அதற்க்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேணாம் பேய் என்பது நாம் வளர்ந்த
கலாச்சாரத்தின் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அதைப்பற்றி பந்தயமோ விவாதமோ வேண்டாம் படிப்படியாய் பயமெல்லாம் கொறைஞ்சுடும் என்றனர்
இதை ஏற்காத ரமேஷ் பந்தயம் கட்ட வக்கில்ல அதான் பின் வாங்கறீங்க
என்றான் அதற்க்கு நண்பர்கள் நால்வரும் ,ரமேசு காசுக்காகவோ பந்த்யத்திர்க்காகவோ பின்வாங்கல விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான்
என்றனர். இப்படி ஏற்ப்பட்ட விவாதம் கடைசியில் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது ஊரே ரெண்டு பட்டது ஒரு தரப்பு
பேய் இருக்கு என்றனர் இன்னொரு தரப்பு பேய் இல்லை என்றனர்
மேலும் சிலர் இரு தரப்பையும் ஊதிவிட்டு குளுரு காய்ந்தனர் .
ஒருநாள் அமாவாசை அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு ரமேஷ் தன்னந்தனியாக அந்த பெண்ணை புதைத்த இடத்தில் ஊர் கொடுக்கும் ஒரு
குச்சியை நாட்டி விட்டு வர வேண்டும் ,அப்படி நாட்டிவிட்டு வந்தால் ஆயிரம்
ரூபாய் என முடிவானது .அந்த நாளும் வந்தது நள்ளிரவு ஒரு மணி ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு ஊர் கொடுத்த குச்சியை கையில்
எடுத்துக்கொண்டு தனியாக புறப்பட்டான் அவனும் தைரியமாக குறிப்பிட்ட இடத்தை அடைந்து குச்சியியை எடுத்து அந்த பெண்ணை புதைத்ட இடத்தில் வைத்து நட்டான் பின் ஒரு கல்லை எடுத்து அந்த குச்சியின்
மீது அடித்து ஆழமாக நாட்டினான் அவன் மனம் திக் திக் என
அடித்துக்கொண்டது ,ஏதோஇனம் புரியாத பயம் மனதில் எழுந்தது,
மனதை திட ப்படுத்திக்கொண்டு, பின் எழுந்து திரும்பினான் ஏதோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான் ஐயோ என சப்தமிட்டு வீழ்ந்தான்.
நேரம் கடந்தது காத்திருந்த மக்கள் சென்றவனை காணவில்லையே என்று
அஞ்சினர் பலர் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் அங்கே
அவர்கள் கண்ட காட்சி ,ரமேஷ் மயங்கி கிடந்தான் அவன் அடித்த குச்சியை
அவன் போர்வையிலேயே சேர்த்து அடித்திருந்தான் .அவன் முகத்தில் தண்ணீர்
theliththu எழுப்பினர் அன்று முதல் ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக எதையுமே
செய்வதில்லை அதுமட்டுமல்ல நல்லவனாகவும் மாறினான் சிலர்
பேசிக்கொண்டு சென்றனர் இததான்ப மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்றது
இப்படியும் பொண்டாட்டி
-------------------------------------------
[ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பு ]
ஒரு நகரத்தில் கந்தன் எனும் குடும்பஸ்த்தன் மனைவியோடும் குழந்தைகளோடும் வாழ்ந்து வந்தான்.அவனொரு தனியார் நிறுவனத்தில்
எழுத்தராக பணியாற்றி வந்தான் அவன் குடும்பம் கிராமத்தில் விவசாயம்
செய்து வரும் ஒரு நடுத்தர குடும்பமாகும் .
இவனுக்கு ஒரு 15மைல் தொலைவில் மாமியார் வீடு உள்ளது ஒரு நாள்
கந்தனின் தம்பி கதிரவன் ஒரு சொந்த வேலையாக நகரத்திற்கு வரும்
சூழல் ஏற்ப்பட்டது வந்த வேலை முடிந்ததால் அப்படியே அண்ணன்,அண்ணி,பிள்ளைகளை பார்த்து செல்வோம் என எண்ணி அண்ணன்
வீட்டிற்கு வந்தான்,அன்று கந்தன் வேலைக்கு லீவு போட்டிருந்தான் ,ஆகையால்
வீட்டிலிருந்தான் ,அண்ணா,அண்ணா எனும் குரல் கேட்டு வெளியே வந்து
பார்த்தால் தம்பி கதிரவன் வாடா உள்ளே என அன்போடு வீட்டிக்கு அழைத்து
உக்கார வைத்து பூவு பூவு என மனைவியைஅழைத்தான்,பூவுஎனும் பூவழகி
வந்திருக்கும் கொழுந்தனை வாப்பா என்று அழைத்து விட்டு அவள் வேலையை
பார்க்க தொடங்கினாl ,
கதிரவனுக்கு பசி ,அவன் தன அண்ணியிடம் சென்று, பசிக்குது அண்ணி
சாப்பாடு இருந்தால் கொடுங்க என்று கேட்டான்கொஞ்சநேரம் கழித்து வந்து
ஒரு தட்டில் பழைய சோறும் வெங்காயமும்எடுத்த ,வைத்தாள்,கதிரவனும் கொடுத்ததைசாப்பிட்டுவிட்டு,அண்ணி நான் புறப்படுறேன் என அண்ணியிடம்
கூறிவிட்டு.அண்ணனிடம் சென்றான்
அண்ணா அப்பா உங்கள அண்ணியையும்பசங்களையும் கூட்டிகிட்டு
திருவிழாவிற்கு வரசொன்னான்கன்னா என்றான் கந்தனும் என்னடா நம்ம
ஊரு திருவிழா வராம இருப்போமா என கூறியவன் பூவு ......பூவு ...என
மனைவியை அழைத்தான்,என்னங்க அடுப்படியில லையாதானே இருக்கேன் கூப்பிட்டுகிட்டே இருக்கீங்க என கையை
துடைத்துக்கொண்டே வந்தாள் காத்திரு ஊருக்கு போறானாமே காசிருந்தா
பஸ்சுக்கு கொடுத்தனுப்புமா என்றான்,காசு காசுன்னா நான் எங்க போறது
இங்க என்ன மரத்திலா காய்க்குது என கோபப்ட்ட பூவழகி,கதிரு இறுக்கிற
நெலம அப்படி பேசிட்டேன் நானே உங்கண்ணன் கொண்டுவரத வச்சி
வதோ ஒப்பேத்திக்கிட்டு வரேன் இதுல காசு காசுன்னா நான் எங்க போறது
இந்தா என முந்தானைளிருந்து 10 ரூபாயை எடுத்து தன கொழுந்தனிடம்
கொடுத்தாள் .
கதிரவன் வாங்க மறுத்ததோடு இல்லாமல் வேணாம் அண்ணி நீங்க இருக்குற
நெலமையில எனக்கு வேற காசு நான் பஸ்சுக்கு பணம், இருக்கு என மறுத்தான்
ஏன்னா கதிருஅண்ணி எதோ சொல்லிட்டேன்னு கோபமா ,ச்சே ச்சே
அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.அப்படி அண்ணி மேல கோபம்
இல்லன்னா இந்தா இத பிடி என கதிரவன் கையில் திணித்தால் ,கந்தனும்
வாங்கிகொடா என சிபாரிசு செய்தான்.
அவன் 11 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டான் ,சிறிது நேரத்தில்
பூவழகியின் தம்பி மணி வீட்டிற்கு வந்தான்,அவனும் எதோ வேலையாய்
நகரத்திற்கு வந்தவன் அப்படியே அக்காவை பார்த்துவிட்டு போகலாம் என
இங்கு வந்து வீட்டின் கதவை தட்டவும் பூவிழி வந்து கதவை திறந்து
உடன் கணவனை நோக்கி என்னங்க என்னங்க இங்க வாங்களேன்
வந்து யாரு வந்துருக்கான்னு பாருங்களேன் என் தம்பி மணி வந்திருக்கான் பாருங்க,என கூப்பாடு போட்டவள் வாடா வாடா வந்து
உள்ள உக்கார் .என்னங்க மச மசன்னு நிக்கறீங்க போயி கூல்ரிங்க்ஸ்
வாங்கியாங்க என கூறி ,மணி ,அம்மா ,அப்பா, மல்லிகா எப்படியிருக்காங்க
அப்பறோம் நம்ம வூட்டு மாடு கண்ணு போட்டிச்சே காள கண்ணா ,கெடேரியா?
என பர பரப்பாயிட்டாள்.
பேசிக்கொண்டே இதோ வரேன் எனக்கூறி கடைக்கு சென்றவள்,சிறிது
நேரத்திற்கு பிறகு சமைக்க ஆரம்பித்தவள் சரியாக
1 மணிக்கெல்லாம் கணவனையும் ,தம்பியையும் உக்காரவைத்து சாப்பாடு
பரிமாற்ற ஆரம்பித்தாள், அது சாப்பாடு அல்ல பெரும் விருந்து .தலை வாழை இலை போட்டு ,நீந்துவன ,பறப்பன,நடப்பன,என ஒரு பெரும்
அசைவ விருந்தே படைத்தாள்.
சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அக்கா தம்பி ,ஊர் கதை ,உறவு கதை என
பேசிக்கொண்டிருந்தனர்,பின் மணி அக்கா,மாமா நான் புறப்படுறேன் என
கூறி புறப்பட்டான் ,உடனே பூவிழி இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து
அவன் பாக்கெட்டில் வைத்தாள் அது மட்டுமா வாசல் வரை வந்தவள் ,
எல்லாரையும் கேட்டோமின்னு சொல்லுடா ,என்னங்க நான் சொன்னது
சரிதானே என கணவனை பார்த்து கேட்டாள் ம்....ம் என தலையை மட்டும்
ஆட்டிக்கொண்டான் கந்தன் ,
காலையில் நம் தம்பி வந்தபோது அவள் நடந்துகொண்ட விதமும் ,இப்போது
அவள் நடந்து கொண்ட விதமும், கந்தனுக்கு ஆச்சரியம் மட்டுமல்ல
மனதிற்குள் கோபமும் ஏற்ப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.இருந்தாலும்
அதை வெளிக்காட்டிக்கொள்ளாத கந்தன் பொருமினான் மனதிற்குள்.
iravu சாப்பிட்டப்பின் குழைந்தைகளை தூங்கியப்பின் படுக்கையில் மனைவியை பார்த்த கந்தன் பூவு என மனைவியை பார்த்தான் ,என்னங்க
என்றாள்,நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்கமாட்டியே....
நீங்க சொன்னா தப்பா நேனைப்பனா? சும்மா சொல்லுங்க .
இல்ல ஊருல இருந்து தம்பி கதிரவன் வந்தான்,பசிக்குதுன்னு சொன்ன
அவனுக்கு பழைய சோறும்,வெங்காயமும் கொடுத்த,பஸ்சுக்கு காசு கேட்டா,
பணம் என்ன மரதிலேயா காய்க்குதுன்னு சத்தம் போட்ட,அதே சமயம்
மச்சான் மணி வந்தான்,அவனுக்கு சாப்பாடு என்ற பேருல ஒரு அசைவ விருந்து
பறப்பன,நீந்துவன,நடப்பன அப்படின்னு,செஞ்சு போட்ட ,போகும்போது
அவன் கேக்காமலேயே 200 ,ரூபாயை எடுத்து பாக்கெட்டுல திணித்து
அனுப்புற இது என்ன ஒரு கண்ணுல,வெண்ண ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு பெரியவங்க சொன்ன மாதிரி பின்னே அது சரியா.
என்னங்க நீங்க இப்படி சொல்லீட்டீங்க கதிரவன் யாருங்க நம்ம ஊட்டு புள்ள ,மணி யாருங்க கொண்டான்கொடுத்தான் அவன் ஊரூல போயி உங்களை ஒன்னு சொன்னான்னா யாருக்குங்க அசிங்கம்,
உங்க கௌரவத்த காப்பாத்துறது பொன்ட்டியாகிய என்னோட
கடமையில்லையா எனக்கூற கந்தன் வாயடைத்து போனான்.
வாய் கொழுப்பு சீலையால் ஒழுகுது
*********************************************
ஒரு சிறிய கிராமம்தான் திருநகரி அந்த ஊரில் குப்புசாமின்னு ஒரு
ஆடு மேய்க்கும் சிறுவன் இருந்தான்,அவன் அந்த ஊரிலுள்ளோர் ஆடுகளை எல்லாம் மேய்த்து அதில் கிடக்கும்,வருமானத்தை வைத்து பிழைத்து வந்தான்.
அவன் யாருமற்ற அனாதையாவான் ,அவனின் பரிதாப நிலையை
கண்டு அந்த ஊரின் வயல்வெளியை ஒட்டி குடிசை போட்டு வாழ்ந்து வரும் காமாட்சி பாட்டி, குப்புசாமி கொண்டு வரும் தானியங்களை சமைத்து கொடுத்து வந்தாள்.
குப்புசாமியும் காமாட்சி பாட்டியை தன பாட்டிபோல கவனித்து வந்தான்,
பாட்டியும் பேரனைபோல் கவனித்து வந்தாள் ,அப்போது மழை காலம்
விறகெல்லாம் நனைந்து அடுப்பெறிக்க விறகில்லாமல் மிகவும் சிரமப்பட்டு
வந்தாள் ,ஒரு நாள் மதியம் ஆட்டுக்கேல்லாம் தழையை பறித்து போட்டு
விட்டு மழையில் நனைந்துகொண்டே சாப்பாட்டுக்கு வந்தான் குப்புசாமி .
காமாட்சிப்பாட்டி ஈர விறகை வைத்து மண்டி போட்டு ஊதி ஊதி சமைக்க
சிறமப்பட்டுக் கொண்டிருந்தாள்,அந்த நேரம் குப்புசாமி அங்கு வரவும் ,
பாட்டி அவனை பார்த்து கொஞ்ச நேரம் அங்க உக்காருடா பாட்டி சமைத்து
தரேன் என்றாள்.
மழை வெளியில் கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்க்க பாட்டி புகையில் ஊதி ஊதி ஈர விறகோடு போராடிகொண்டிருக்கையில்
இயற்க்கை உபாதான





No comments:
Post a Comment