Wednesday, 9 November 2011

முத்துக்கள் முப்பது 1



1. சிரிப்பதானால் கபடம் இன்றி சிரியுங்கள்
2 .சிந்திப்பதானால் இடையூறின்றி சிந்தியுங்கள்
3   செயல்படுவதனால் முழுமனதோடு செயல்படுங்கள்
4   விட்டுக்கொடுப்பதானால்  தடை  இன்றி விட்டுக்கொடுங்கள்
5   உதவி செய்வதானால் எதிபார்ப்பின்றிஉதவி செய்யுங்கள்
6   காதலிப்பதானால் களங்கமின்றி காதலியுங்கள்
7    போராடுவதானால்   வெற்றி கிட்டும் வரை போராடுங்கள்
8   பேசுவதானால் இனிமையானவற்றை பேசுங்கள்
9    நடிப்பதானால் நம்பும்படி நடியுங்கள்
10  பொய் பேசுவதானால் கெடுதளின்றி  பேசுங்கள்
11  பாடுவதானால் ரசிக்கும்படி பாடுங்கள்
12  உன்னுவதானால் சுவைத்து  உண்ணுங்கள்
13  உரையாடுவதானால் சர்ச்சை இன்றி உரையாடுங்கள்             
14   உறங்குவதானால் சலனமின்றி உறங்குங்கள்
15   வாழுவதானால் பகையின்றி வாழுங்கள்
16   கூடுவதானால் அன்பானவrotu  கூடுங்கள்
17  முன்னேறுவதானால் பொராமை இன்றி  முன்னேறுங்கள்
18   பிராணிப்பதானால் துணையோடு பிறையானியுங்கள்
19   தனி வழியானால் துணிவை  துணை கொள்ளுங்கள்
20   வாக்களிப்பதானால் செயல் படுவோர்க்கு  வாக்களியுங்கள்
21   உறுதியலிப்பதானால் செயல்படுத்துவதை உறுதியளிங்கள்
22   உறவாடுவதானால் உளமாற உறவாடுங்கள்
23   உழைப்பதானால்  உய ர்வுக்காக உழையுங்கள்
24    எண்ணுவதானால் உயர்வானவற்றை  எண்ணுங்கள்
25    போட்டியிடுவதானால் தகுதியானவரோடு போட்டியிடுங்கள்
26    ரசிப்பதானால் ரசனையுள்ளவற்றை  ரசியுங்கள்
27    படிப்பதானாள் பயனுள்ளவற்றை படியுங்கள்
28    வழிபடுவதானால் தூய    மனதோடு வழிபடுங்கள்
29    கற்ப்பதானால் காலவரையின்றி கற்றிடுங்கள்
30    நேசிப்பதானால் தாய் நாட்டை நேசியுங்கள்  

 

1 comment:

  1. அருமை! எழுதினால் நீங்கள் முழுமையாக எழுதுங்கள்!
    10. ?

    ReplyDelete