Thursday, 10 November 2011

கம்ப்யுட்டர்





படிப்படியாய் படித்து  படித்து
பட்டம் வாங்குறான் -அவன்
படிச்சிப்புட்டு வேலை தேடி -பல
படிய மிதிக்குறான்

வேலையுல விஞ்சானத்த
புகுத்திபுட்டங்க -ஆனா
வேலையில்லா திண்டாத்த பெருக்கிபுட்டாங்க

கம்ப்யுட்டர் பத்துபேரின்
பணிய செய்யுதாம் -ஆனா
கணக்கு பாத்த பத்துபேரின்
வேலை போகுதாம்

வித விதமாய் படிச்சி படிச்சி
பட்டம் வாங்குறான் -அவன்
நோ வேக்கன்சி போர்ட பார்த்து
நொந்து சாகுறான்

கருவிகளை பிடிக்க  கூட
கம்பியூட்டர் தாங்க -ஆனா
கருவி பிடிக்க படிச்சவனுக்கு
தின்ட்டம்தாங்க

அச்சு கோர்த்து பார்க்க கூட
கம்பியூட்டர் தாங்க- இப்ப
அரண்மனையில்  வேலை செய்ய
 கம்பியூட்டர் தாங்க

தேச படையில் கூட கம்பியூட்டர்
ஆட்சி நடக்குதாம்
கம்பியூட்டர்  வேலை இல்லார்
தொகைய இப்ப கணிக்க உதவுதாம்

21 நூற்றாண்டில்
இனிமை போகுது -இந்த
இயந்திர மய உலகத்தில்  இப்ப
இதான் நடக்குது   

No comments:

Post a Comment