Friday, 25 November 2011

நட்பு



மலருக்கும் வண்டுக்குமிடை
மகரந்த நட்பு
கடலுக்கும்  நதிக்குமிடை
நாணல் நட்பு

தாய்க்கும் சேய்க்குமிடை
உயிரே நட்பு
தந்தைக்கும் மகனுக்குமிடை
அறிவே நட்பு

தள்ளாத வயதில்
தடியும் நட்பு
தர்மம் செய்வோர்க்கு
மனமே நட்பு

மனிதனுக்கும் கடவுளுக்குமிடை
அருள்தான் நட்பு
மகாத்மாகளுக்கு
சேவையே நட்பு

உயிரே உனக்காக என்பது
உடல் நட்பு
உயிரோடு கலப்பது
உண்மை நட்பு

அரசியல்வாதிகளுக்கு
சந்தர்ப்பமே நட்பு
அறிவார்ந்தோர்க்கு
ஆயிரம் நட்பு

ஆயிரம் வழிகளில்
அமைந்திடலாம் நட்பு
அளவுக்கு மீறினால்
அதுவும் கசப்பு

இங்கொன்று பகர்வது
எனது பொறுப்பு
இயம்பாமல் இருப்பின்
இல்லை இனிப்பு

உயிரில் கலந்த ஒருவரின்
உண்மை நட்பும்
உறவோடு உயிரில் கலந்த
மனைவியின் வாழ்க்கை நட்பும்

கிட்டிடின் அதுவே ஆயிரமாயிரம்
சிறப்பினும் சிறப்பு
ஆஹா அமைவது
அவரவர் மனமதை பொறுத்து


   

No comments:

Post a Comment