
அளவில்லா ஆசையினாலே -மனிதன்
அமைதி இழக்கிறான் பாரு
நிலையில்லா பூமியின் மேலே -தினம்
நிம்மதி என்பது ஏது
உண்மை இல்லாதொரு வாழ்க்கை -யாரும்
உயரே உயரே வாழ்ந்தாலும்
கண்மூடி திறப்பதர்க்குள்ளே -யாவும்
மன்மேடாய் போவது உறுதி
ஊருக்குள் நல்லவன் போலும் -உயர்
ஒப்பற்ற பக்திமான் போலும்
நேருக்கு மறை தீங்கு செய்து -இப்
பாருக்குள் வாழ்ந்தவர் யாரு
ஊருக்கு உபதேசம் செய்து -வெறும்
பேருக்கு வாழ்வை வாழ்வார்
சேறுக்குள் வாழ்வதைவிடவே -இவர்
செத்து மடிவதே மேலாம்
உண்மை அழிவதுமில்லை -இவ்
உலகம் மறப்பதுமில்லை
நல்லோர் வாக்குகள் வழியே -நாளும்
நடந்தே வெற்றிகள் பெறுவோம்

No comments:
Post a Comment