Thursday, 24 November 2011

இவர்களும் மனிதர்களாம்



வரதச்சணை  என்ற  பெயரால்
பெண்களிடம் தன்னையே
விற்றுவிட்டு -தாலி
கட்ட நினைக்கும் -தரம்கெட்டவர்கள்

பணத்தை வாங்கிக்கொண்டு -படுக்கையை
பகிர துடிக்கும்  -மறவர்கள்

கொடி இடையாளிடம் பிடியலவாவது
தங்கத்தை எதிர்பார்க்கும் -கனவான்கள்

கொஞ்சக்கூட கூலி கேட்கும் -கொடூரர்கள்

சொல்லால் சுட்டெரிக்கும் -சுயநலமிகள்

மானத்தையும் மனசாட்சியையும்
மனைவியிடம் விற்று தட்சனை எதிர்பார்க்கும் -மானங்கெட்டவர்கள்

                     கைதடி

காசுக்காக காலனையே [எமன்] பூமியில்
காலூன்ற உதவும் கைத்தடிகள்

                மந்திரவாதி

மாமியார் கொளுத்தும்போது
வெடிக்காத அடுப்பு
மருமகள் கொளுத்தும்போது மட்டும்
வெடிக்கச்செய்யும் -மந்திரவாதி

No comments:

Post a Comment