
சின்ன சின்ன தம்பி -நான்
சொல்வதை கேள் தம்பி
காலையிலே எழுந்தவுட்டன் படிக்கணும் -பின்
காலைக்கடன் அனைத்தையுமே முடிக்கணும்
பற்களையே வெண்மையாக துலக்கணும் -பின்
அழுக்கு போக தேய்த்து நல்லா kulikkanum
பக்தியோடு தெய்வத்தையே வணங்கனும் -பின்
பட்சனத்தையே மென்று நல்லா சுவைக்கணும்
தலைசீவி சலவை துணி உடுக்கணும்
கலையில சாலையிலே நடக்கணும்
நேரத்தோடு பாட சாலை அடையணும்
கோரசாக இறைவணக்கம் பாடனும்
குருவை நாம வணக்கம் சொல்லி மதிக்கணும் -நம்
குலம்விலங்க அருமையாக படிக்கணும்
சுட்டி நாம சுறுசுறுப்பாய் இருக்கணும் --நல்ல
குழந்தைகளோடு கூடி ஆடி மகிழனும்
நாளை உலகை ஆள நீயும் வளரனும் -நல்ல
பண்புகளை உசுரை போல மதிக்கணும்
ஏழைகளை கண்டா நீயும் இறங்கனும் -நாட்டில்
எல்லாரையும் குடும்பம்போல நினைக்கணும்
No comments:
Post a Comment