![]() |
| கருணாநிதி |
அஞ்சுகம் அம்மையாரின்
அரும் பெரும் புதல்வா
அஞ்சாது பாடுப்பட்டு -தமிழர்
அகத்திலே குடி கொண்டாய்
ஆற்றல் மிக்கவராய் -தமிழரை
ஆக்கவே வேண்டுமென்று
ஆசையை மனதிற் கொண்டு -உரை
ஆற்றலை மேற்கொண்டாய்
இநதியை தினித்திட்டால் இலக்கியம்
பாழ்படுமென்று என்று
இரயில் பாதையில் தலைவைத்து -தமிழ்
இலக்கியத்தை காத்து நின்றார்
ஈகை அற்ற நெஞ்சர்களும்
ஈரமற்ற நஞ்சர்களும்
ஈந்து வாழ் என்லம்பி
ஈ வே ரா வழி நின்றாய்
உலக அரங்கிலே -தமிழ்
உயர்ந்து நிற்க வேண்டுமென
உழைத்தே வாழ்ந்து வரும்
உத்தமரும் நீரன்றோ
ஊளையிடும் பேர்களிடையே-சிலர்
ஊமையாய் வாழ்ந்து வர
ஊர் ஊராய் திரிந்தே நீ -தமிழ்
ஊட்டியே உயர்த்திவிட்டாய்
எதையும் தாங்கும் இதயம்
எல்லோர்க்கும் வேண்டுமென்று
எதிர்ப்பட்ட தடை தாண்டி
எந்திரம் போல் பாடுப்பட்டாய்
ஏணியாய் நீ நின்று -தமிழரை
ஏற்றவே வேண்டுமென்று
ஏலன வெஞ்சிறைகள் -பல
ஏகியே மீண்டவன் நீ
ஐம்பத்தி ஆறு சேசம்-தமிழை
அறியவே வேண்டுமென்று
ஐம்பெரும் காப்பியத்திற்கு
அழகு நடை கொடுத்தாய்
ஒய்யார தமிழ் நடை
ஒற்றுமையில் தமிழ் கடை -அதனால் மக்கள்
ஒருங்கிணைந்த நிழலில் நிற்க -உயந்து வந்த
ஒரு குடை நீ
ஓங்காரமுள்ள தமிழ் -உலகில்
ஒங்க செய்திடவே -நீ
ஓடி உழைத்த இடம்
ஓரிடமா ஈரிடமா
ஔவைகோர் கொன்றைவேந்தன்
அறிவிற்க்கோர் கொள்கைவேந்தன்
எங்களுக்கோர் தமிழ் வேந்தன்
உங்கள் வழியே நாங்கள் சார்ந்தோம்

No comments:
Post a Comment