ஈபவர் இதயத்தில் சுரந்து
ரணத்தை குணமாக நினைத்து
இம்மையில் இல்லாதோர்க்கு ஈதலே .............. ஈரம்
ஈரம்: இயேசுதாஸ் என்னும் நல்ல உள்ளம், உடைந்து போன பல ஏழை உள்ளங்களுக்காக, முழு உள்ளதோடு துவக்கிய இந்த சிறிய தண்ணீர் துளி , வெள்ளமென நண்பர்களின் உள்ளங்களிலும் சுரந்து, இன்று உதவும் உள்ளங்கைகளில், வெப்ப நீராக அல்லாமல், தேனாக வெளியேறுகின்ற காட்சி அனைத்து நல் இதயங்களிலும் நெகிழ்ச்சி...
தேவையில் உதவி இல்லாமல் தவிக்கும் பலருக்கு, கல்வி உதவி, உணவு, இருக்கை, மருத்துவ உதவி போன்ற பல நற்காரியங்கள் இல்லம் சென்று செய்ய படுதல் சிறப்பு.
இந்த இயக்கத்தில் எனது மனதை அர்ப்பணிக்க என் மனமே தூண்டியதால் என் சிறிய துளிகளை சமர்பிக்க விரும்பினேன். மருத்துவனான நான், மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
இதை படிக்கும் ஒரு சில நல்ல இதயங்களில் இந்த ஈரம் சுரக்கும் என்றால் நான் பெரும் பாக்கியம் அடைவேன்..
இவன்,
பறவைகள் விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை,கலயங்களில்,
சேர்த்துவைப்பதுமில்லை அவ்வாறான அவைகளுக்கே இறைவன்
உணவிடும் போது இறைவன் நம்மை கை விட்டு விடுவாரோ?--
மறை நூல்







contact no.
ReplyDeletemr.esudoss.. 9600245253