உ ள்ளத்தின் ஓசைகளை உயிரூட்டி
வார்த்தைகளால்,கற்பனையால்,அலங்கரித்து
மொழியுனர்வால் ,கலைத்திறனால் மகுடமிட்டு,
எட்டுத்திக்கும் அறியும்படி முரசுக்கொட்டி,
எல்லோரும் ஏற்றமிகு வாழ்த்துப்பாட,
முத்தமிழில் முக்கனிபோல்,சொல்லெடுத்து ,
கவர்ந்திழுக்கும்,கட்டழகு,பென்னைபோலும்,
களிரைக்கண்டு கலங்கிடாத ஆண்மைபோலும் ,
வளர்ந்துவரும் சந்ததிக்கு வழியும்காட்ட,
உயர்ந்து நிற்கும் கலங்கரை விளக்குமாக,
வருந்திடும் வண்மைக்கு சாட்டையாக,
தொடர்ந்திடும்,வறுமைக்கு வேலியாக,
அழகுடைய மொழியுனர்வால் அலங்கரித்து
அகிலமே அறிந்திட எடுத்துக்காட்ட
ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைத்து
ஒப்பற்ற உயர்ந்த வழியுமாக,
கலாசசாரக்கருத்துகளை காத்திடவே
கருணையும்,கல்வியையும்,செழித்தோங்க
சிந்தனை தூரிகைளிருந்து சித்தரித்து,
தெளிக்கப்பட்ட முத்துக்களே,கவிதை ****************


கவிதை கலக்கல்!
ReplyDelete