Tuesday, 13 December 2011

எழுதுகோல்






என்னத்தை எழுத்தாக்க -நல்
வண்ணத்தை வரிகளாக்க
முக்காடு போட்டிருக்கும் -கொடுமையின்
முகத்திரையை கிழித்துக்காட்ட

வெண்சாமரம் வீசிக்கொண்டும்,
பன்னீரில் குளித்துக்கொண்டும்
சஞ்சாரம் செய்கின்ற -ஊழலை
வெளிச்சம் காட்ட

கண்ணீரை பயிராக்கி
செந்நீரை உரமாக்கி 
கண்ணீரில் தத்தளிக்கும் -உழைக்கும்
வர்க்கம் தலைநிமிர

வையம் வாழ்த்துப்பாட -மொழியில்
ஐயம் தீர்த்திடவே
மெய்யை உணர்த்திடவே -மொழி
மேன்மை அடைந்திடவே

எண்ணம் ஏற்றம்பெற -உலகில்
இன்னும் எவ்வளவோ
பண்ணும் பாங்கான -படைப்பே
எழுதுகோல் ////////////////

No comments:

Post a Comment