Wednesday, 30 November 2011

புவி வெப்பமாவதை தடுக்க நம்மால் இயன்றது








அன்பான இதயங்களே   வணக்கம

இன்றைய உலகம் படிப்படியாக வெப்பமடைதுகொண்டே வருகின்றது
வட  மற்றும்  தென்  துருவங்களில்  இருக்கும்  பனிமலைகள்  கொஞ்ச
கொஞ்சமாக  உருகி  வருவதால்  கடல் மட்டம் உயர்ந்து வருவது யாவரும்
அறிந்ததே .

உலகை காத்து வரும் ஓசோன் படலமும் ஓட்டை வீழ்ந்து வருகின்றது
அதனால் அமில மழை பல இடங்களில் பெய்ந்து கொண்டு வருவதும்
கவலை அளிப்பதாகும். மேலும், புறஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்தும் ,
மனிதகுலத்தை காக்கும் பெரும் பணியை செய்வதும் இந்த ஓசோன்
படலமேயாகும் .இதை காப்பது மனித குலத்தின் தலையாய கடமையாகும்.

கால பருவ மாற்றம் அடைந்து வருவதும் கவலை தருவதே ஆகும் ,
மழை குறைந்து வருவதும்,கவலைக்குரியதாகும் .

மழை நீர் மண்ணில் புக வழியின்றி கடலில் கலந்து வீணாவதும்
தவிர்க்கப்படவேண்டிய ஒன்று .

ஒலி மாசு இன்றைய நாகரீகத்தின் மிக மோசமான வெளிப்பாடு

கோடை காலத்தில் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே
வருவதும் வருத்தம் அளிக்க கூடியதே .

காற்றும் நாளுக்கு நாள் மாசு பட்டுக்கொண்டே வருகின்றது உயிர் வளி
என்று சொல்லக்கூடிய பிராண வாயுவின் [ஆக்சீசன் ] சதவிகிதம் குறைந்து
உடல் ஆரோக்கியம்  உலகெங்கும் கெட்டு வருவதும் ஒன்றும் மகிழ்ச்சி
 தரக்கூடிய தகவலும் அல்ல .இதெல்லாம் புவி வெப்பமடைதலின் காரணத்தால்தான், மேலும்  இதற்க்கு காரணம் மனிதனின் நாகரீகத்தின்
மோகம் என்பதை மறுக்கலாகாது .இயற்க்கை மிக உன்னதமானது
அதை பேணி காப்பது மனிதனின் தலையாய கடமைகளில் ஒன்று

முதலில் கடல் மட்டம் ஏன் உயருகின்றது என பார்ப்போம் பனிமலைகள்
தூய வெண்மையாக இருப்பதால் சூரிய வெளிச்சத்தை உள் வாங்காமல்
ரிப்ளக்ட் ஆவதால் சூரியனின் வெப்பம்  பனிமலைகளை  தாக்காது ,
ஆதலால்,பனிமலைகள் உருகுவது தவிற்கப்படுகின்றது.
.
 ஆனால் இன்றைய விஞ்சான உலகில் தொழிற்கூடங்கள்,
வாகனப்பெருக்கம், போன்றவற்றால் வெளியிடப்படும் புகை,
குளிர்சாதன்களால் வெளியிடப்படும் [ குளோரோ -  புளோரோ  கார்பன்  ]
என்று சொல்லப்படும் நச்சு வாயு ,மற்றும்  காற்றில் கரிமில வாயு அதிகமாதல்.
இதனால் பணிமளைகளின் மீது கரிமில வாயு மற்றும் நச்சு வாயுக்கள்
 படிவதால் , வெண்மை  மங்கி சூரிய ஒளிக்கதிர்களை
ரிப்ளிக்ட் செய்யாமல் உள்வாங்குவதால் ,பனிமலைகள்
 உருகி கடல்மட்டம் உயர்ந்து வருவதால் கடலோர நகரங்கள் இருந்த சுவடே
 தெரியாமல் அழிந்து கொண்டே வருவதும் நாம் வரலாறுகளாக படித்தும்
 வருகிறோம், பார்த்தும்  கேட்டும்  வருகின்றோம்

இந்த நிலை மாற அல்லது குறைய நம்மால் இயன்றதை எவாறு செய்யலாம்
குறைந்தது ஒவ்வொரு நபரும்
ஆளாளுக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மரங்களைவளர்க்கலாம் ,

சமூக தொண்டாக காடுகள் வளர்ப்பதில் அக்கறை காட்டலாம் ,

 ஒரு மரத்தை வெட்டினால் பல மரங்களை வளர்க்க முற்ப்படலாம்,

மேலும் காற்றில் மாசு ஏற்ப்படுத்தாத புதுப்பிக்கவல்ல    எரிசக்திகளான சூர்யா வெளிச்ச மின்சாரத்தின் மூலம்  இயங்க கூடிய சாதனங்களை
 பயன்படுத்தலாம்



,குண்டு பல்புகளை பயன்படுத்துவதை தவிக்கலாம் ,

குளிர் சாதனங்களை பயன்பாட்டை குறைக்கலாம்,

வாகனத்தில் அதிகமாக    புகை  வரும் வாகனங்களை தவிர்க்கலாம்,




தொழிற்ச்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டின் மூலம் நச்சு புகைகளை
புதிய தொழில் நுட்பத்தின் மூலம் பில்டர் செய்து வெளியேற்றலாம்,




மழை உலகில் குறைவாகத்தான் பெய்கின்றது, அதிலும் பெறப்படும் மழை,
சேமிக்கப்படவில்லை .அந்த காலங்களில் அதாவது மன்னர் காலங்களில்
ஏரிகள் ,குளங்கள்,ஊருணி ,குடடைகள்,வெட்டப்பட்டன .ஆனால் நாம்
அந்த ஏரிகளையும்,குளங்களையும்,மறைத்து அல்லது மூடி கட்டிடங்களையும்
பங்களாக்களையும் ,எழுப்பி வருகின்றோம் இதனால் மழை நீர்
சேமிக்கப்படாமல்,வீணாக கடலில் கலக்க நாமே காரணமாக இருக்கின்றோம்
என்பதே உண்மை அது மட்டுமா நிலத்தடி நீர் வெகு வேகமாக குறைந்து
வருகின்றது ,இதனால் குடிநீர்   தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம் நம்மை
 சூழ்ந்துள்ளது   மேலும் நிலநடுக்கம் ஏற்ப்பட நிலத்தடி நீர் குறைவது ஒரு
காரணம் என விஞ்சானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைக்கு நாம்
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கும் முக்கிய காரணமாகும்
நிலத்தடி  நீர் மாசுபட்டுக்கொண்டே வருகின்றது,காரணம் ரசாயன
ஆலைகள், matrum   saaya   aalaikgal, அரசு எத்தனையோ, thittangalai  நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்க திட்டம் theettinaalum manasaatchi  illaatha


பிளாஸ்டிக்குகள் மக்காத ஒரு பொருள் அவைகள் நீரை மட்டுமல்ல ஒரு விதயைகூட மண்ணில் புதைந்து முளைக்க செய்யாது .
 ஆனால் நாம் பிளாஸ்டிக்குகளை அதன் தீமை அறியாமல் , அன்றாடம் பயன்படுத்துவதுதான் கொடுமையிலும் கொடுமை. ஆகவே பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்
.
ஒவ்வொரு மனிதனும் நிலத்தடி நீரின் அளவை மேம்படுத்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கலாம் .இதற்க்கு அரசும் மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கலாம் .[கடல் நீர் நிலத்தில் அடியில் புகுந்து கடலோர
மனித வாழ் பகுதிகளில் குடிநீரே கிடைக்காத நிலை உள்ளது என்பது
உலகறிந்த உண்மை ஆதலால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கண்டிப்பாக அனைவரும் அமைத்து நிலத்தடி நீரை காப்போம் என இந்த தருணத்தில் சபதமெடுப்பது அவசியமாகும் ]


காற்று மாசு படுவதற்கு மரங்களை வெட்டுவதும் காடுகள் அழிக்க படுவதும் முக்கிய காரணமாகும். மரம் கரிமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் தான் வளிமண்டலம் சமச்சீராக இயங்கி வருகிறது
இது இறைவன் படைப்புகளில் அதிசயமாகும் . மனித குலத்திற்கு இயற்க்கை அளித்த ஒரு வரமாகும். காடுகள் குறைந்தால்,  கரிமில வாயு அதிகரிக்கும் அபாயம் அதிகம் என்பதை மனிதன் உணர வேண்டும், காற்று மாசு படுவதிலிருந்து இவ்வுலகை காக்க நம்மால் இயன்றதை செய்கின்ற வகையிலே காடுகளை காக்க வேண்டும் மரங்களை புதியதாக வளர்க்க வேண்டும்.






அடுத்து ஒலி மாசு -ஒரு குறிப்பிட்ட டெசிப்பல் வரைதான் நம் உடல்
அல்லது காதுகள் ஒலியை ஏற்றுக்கொள்ளும்  ஆனால் நாம் வாகனங்கள் ,தொழிற்சாலைகள் ,பலவகையாக ஒலி மாசை ஏற்ப்படுத்தி
வருகின்றோம் .குறிப்பாக மருத்துவமனை அருகில் நோயாளிகளின்
நலனை கருத்தில் கொண்டு ஒலி எழுப்பாதே என  குறிப்பிட்டிருக்கும்
ஆனால் நாம் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அதிக டெசிபலுடன்
கூடிய ஒலிப்பானை பயன்பயுத்துவோம் இதெல்லாம் சரியா ?
குழந்தைகள் ,இதய நோயாளிகள் ,பாதிக்க படமாட்டார்களா ?
மனிதனுக்கு மனிதாபிமானம் வேண்டாமா இதையெல்லாம் தடுக்க நம்மால் ஆனதை செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே ..



உலகில் நவ  நாகரீகம் என்பது தவிக்க முடியாதது என்றாலும் கூட
ஒவ்வொருவரும் புவிவெப்பமடைதலை கவனத்தில் கொண்டு புவனத்தை காக்க முயற்சி மேற்கொள்ளும் வகையில் நம்மால் இயன்றதை உணர்வு பூர்வமாக செய்ய முன் வர வேண்டும்

பூமி பந்து தன் பரந்த   விரிந்த எண்ணிலடங்கா அதிசயங்களை
தன்னகத்தே கொண்டு, எல்லா ஜீவராசிகளையும்  தற்காத்து,தன்னையும்
 காத்துக்கொள்ள மனிதன்  தன்னுள்  இருக்கும் மனிதத்தை,
வெளிக்கொணர்ந்து ,  உலகில் உள்ள அனைத்து
அங்கங்களையும் காப்பதும்,அதை பேணுதலும்  அவசியம்.


.ஆகவேதான் நம்முடைய ஜீவாதாரமான ,இயற்க்கை அன்னை நமக்களித்த
அற்புதமான இந்த பூமியை அழிவிலிருந்தும்,சிதைவிளிருந்தும்,
காப்பாற்றுவதன், மூலம்,  பூமியில் வாழும் அனைத்து உயிர்களை
காப்பாற்றுவதுமட்டுமல்ல,நம்முடைய சந்ததிகளுக்கு
பின் வரும்,காலங்களுக்கு அற்புதமான,ஆச்சரியமான,
தூய்மையான,அழகான, ஆனந்தமான,விவரிக்க முடியாத விந்தைகளை
உள்ளடக்கிய,இந்த,நாம் வாழும் பூமிப்பந்தை ,பரிசாக விட்டுச்செல்வோமாயின்
அதுவே  மனிதன் மனிதத்துடன் வாழ்ந்ததின் அடையாளமாகும்.
                                                                                           அன்புடன்
                                                                                     *******************
                                                                                   வைத்திமுருகன்
                                                                                  

     
                                                                                     கைபேசி எண்-9894261297 
நண்பர்களின் புதுவைரகங்கள் திரை இசை குழு,
புதுச்சேரி -9 

பழமொழி கதைகள் மற்றும் பாட்டி கதைகள்




மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
--------------------------------------------------------------------------





ராயன் பட்டு என்ற சிறிய கிராமத்தில் நான்கு நண்பர்கள் இருந்தனர்
முரளி ,ராமன் குமார்,மற்றும் வைத்தி இவர்கள் எப்போதும்
இணை பிரியாமல்குமார்,மற்றும் வைத்தி இவர்கள் எப்போதும்
 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோசமாக இருந்தனர்

இவர்கள் நல்ல சிந்தனை ,உதவி மனப்பான்மை ,பல் நோக்கு சிந்தனை
என ஏராளமான சமூக சிந்தனை உடையவர்கள் .அதே ஊரில் ரமேஷ் என்ற
குதர்க்கவாதியும் இருந்தான் இவன் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்வான்
அது சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருவள் அகால மரணமடைந்துவிட்டால்

ஊரில் சிலர் இறந்த பெண் பேயாக வந்து உலவுவதாக புரளி ஏற்ப்பட்டு
 சாயங்காலம் 6  மணிக்கெல்லாம் வீட்டிற்குள் வந்துவிடுவார்கள் அதனால்
ஊரே பயத்தால் மயான அமைதியாகிவிடும் இப்படி இருக்கையில் ஒரு நாள் நான்கு நண்பர்களும் பேயை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர்
அப்போது ஏட்டிக்கு போட்டி என்று அழைக்கப்படும் ரமேஷ் அங்கு வந்து
பேய் என்பதெல்லாம் பொய் நான் இரவு ஒரு மணிக்கு கூட எங்கு வேணாலும் தனியாக போவேன் பந்தயம் எவ்ளோ ?என்றான்  அதற்க்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேணாம் பேய் என்பது நாம் வளர்ந்த
கலாச்சாரத்தின் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அதைப்பற்றி பந்தயமோ விவாதமோ வேண்டாம் படிப்படியாய் பயமெல்லாம் கொறைஞ்சுடும் என்றனர்

இதை ஏற்காத ரமேஷ் பந்தயம் கட்ட வக்கில்ல அதான் பின் வாங்கறீங்க
என்றான் அதற்க்கு நண்பர்கள் நால்வரும் ,ரமேசு காசுக்காகவோ பந்த்யத்திர்க்காகவோ பின்வாங்கல விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான்
என்றனர். இப்படி ஏற்ப்பட்ட விவாதம் கடைசியில் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது ஊரே ரெண்டு பட்டது ஒரு தரப்பு
பேய் இருக்கு என்றனர் இன்னொரு தரப்பு பேய் இல்லை என்றனர்
மேலும் சிலர் இரு தரப்பையும் ஊதிவிட்டு குளுரு காய்ந்தனர் .

ஒருநாள் அமாவாசை அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு ரமேஷ் தன்னந்தனியாக அந்த பெண்ணை புதைத்த இடத்தில்  ஊர் கொடுக்கும்   ஒரு
குச்சியை நாட்டி விட்டு வர வேண்டும் ,அப்படி நாட்டிவிட்டு வந்தால் ஆயிரம்
 ரூபாய் என முடிவானது .அந்த நாளும் வந்தது நள்ளிரவு ஒரு மணி ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு ஊர் கொடுத்த குச்சியை கையில்
எடுத்துக்கொண்டு  தனியாக புறப்பட்டான் அவனும் தைரியமாக குறிப்பிட்ட இடத்தை அடைந்து குச்சியியை எடுத்து அந்த பெண்ணை புதைத்ட இடத்தில் வைத்து நட்டான் பின் ஒரு கல்லை எடுத்து அந்த குச்சியின் 
மீது அடித்து ஆழமாக நாட்டினான்  அவன் மனம்  திக் திக் என
அடித்துக்கொண்டது ,ஏதோஇனம் புரியாத பயம் மனதில் எழுந்தது,
 மனதை திட ப்படுத்திக்கொண்டு,  பின் எழுந்து திரும்பினான் ஏதோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான் ஐயோ என சப்தமிட்டு வீழ்ந்தான்.

நேரம் கடந்தது காத்திருந்த மக்கள் சென்றவனை காணவில்லையே என்று
அஞ்சினர் பலர் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்   அங்கே
அவர்கள் கண்ட காட்சி ,ரமேஷ் மயங்கி கிடந்தான் அவன் அடித்த குச்சியை
அவன் போர்வையிலேயே சேர்த்து அடித்திருந்தான் .அவன் முகத்தில் தண்ணீர்
theliththu எழுப்பினர் அன்று முதல் ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக எதையுமே
செய்வதில்லை அதுமட்டுமல்ல நல்லவனாகவும் மாறினான் சிலர்
 பேசிக்கொண்டு சென்றனர் இததான்ப மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்றது


                           இப்படியும்  பொண்டாட்டி
                          ------------------------------------------- 
         [ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பு ]

                         



ஒரு  நகரத்தில்  கந்தன்   எனும்  குடும்பஸ்த்தன் மனைவியோடும் குழந்தைகளோடும் வாழ்ந்து வந்தான்.அவனொரு தனியார் நிறுவனத்தில் 
எழுத்தராக பணியாற்றி வந்தான் அவன் குடும்பம் கிராமத்தில் விவசாயம் 
செய்து வரும் ஒரு நடுத்தர குடும்பமாகும் .

இவனுக்கு ஒரு  15மைல் தொலைவில் மாமியார் வீடு உள்ளது ஒரு நாள் 
கந்தனின் தம்பி கதிரவன் ஒரு சொந்த வேலையாக நகரத்திற்கு வரும்
சூழல் ஏற்ப்பட்டது வந்த வேலை முடிந்ததால் அப்படியே அண்ணன்,அண்ணி,பிள்ளைகளை பார்த்து செல்வோம் என எண்ணி அண்ணன் 
வீட்டிற்கு வந்தான்,அன்று கந்தன் வேலைக்கு லீவு போட்டிருந்தான் ,ஆகையால் 
வீட்டிலிருந்தான் ,அண்ணா,அண்ணா எனும் குரல் கேட்டு வெளியே வந்து
பார்த்தால் தம்பி கதிரவன் வாடா உள்ளே என அன்போடு  வீட்டிக்கு அழைத்து 
உக்கார  வைத்து  பூவு பூவு என மனைவியைஅழைத்தான்,பூவுஎனும் பூவழகி 
வந்திருக்கும் கொழுந்தனை வாப்பா என்று அழைத்து விட்டு அவள் வேலையை 
பார்க்க  தொடங்கினாl  ,

கதிரவனுக்கு  பசி  ,அவன் தன அண்ணியிடம் சென்று, பசிக்குது அண்ணி
சாப்பாடு இருந்தால் கொடுங்க என்று கேட்டான்கொஞ்சநேரம் கழித்து  வந்து
ஒரு தட்டில் பழைய சோறும் வெங்காயமும்எடுத்த ,வைத்தாள்,கதிரவனும் கொடுத்ததைசாப்பிட்டுவிட்டு,அண்ணி நான் புறப்படுறேன் என அண்ணியிடம் 
கூறிவிட்டு.அண்ணனிடம் சென்றான்

            அண்ணா அப்பா உங்கள அண்ணியையும்பசங்களையும் கூட்டிகிட்டு
திருவிழாவிற்கு வரசொன்னான்கன்னா என்றான் கந்தனும் என்னடா நம்ம
 ஊரு திருவிழா வராம இருப்போமா என கூறியவன் பூவு ......பூவு ...என 
மனைவியை அழைத்தான்,என்னங்க அடுப்படியில லையாதானே இருக்கேன் கூப்பிட்டுகிட்டே இருக்கீங்க என கையை 
துடைத்துக்கொண்டே வந்தாள் காத்திரு ஊருக்கு போறானாமே காசிருந்தா 
பஸ்சுக்கு கொடுத்தனுப்புமா என்றான்,காசு காசுன்னா நான் எங்க போறது 
இங்க என்ன மரத்திலா காய்க்குது என கோபப்ட்ட பூவழகி,கதிரு இறுக்கிற
நெலம அப்படி பேசிட்டேன் நானே உங்கண்ணன் கொண்டுவரத வச்சி 
வதோ ஒப்பேத்திக்கிட்டு வரேன் இதுல காசு காசுன்னா நான் எங்க போறது 
இந்தா என முந்தானைளிருந்து  10 ரூபாயை எடுத்து தன கொழுந்தனிடம் 
கொடுத்தாள் .

 கதிரவன் வாங்க மறுத்ததோடு இல்லாமல் வேணாம் அண்ணி நீங்க இருக்குற 
நெலமையில எனக்கு வேற காசு நான் பஸ்சுக்கு பணம், இருக்கு என மறுத்தான் 
ஏன்னா கதிருஅண்ணி எதோ சொல்லிட்டேன்னு கோபமா ,ச்சே ச்சே 
அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.அப்படி அண்ணி மேல கோபம் 
இல்லன்னா இந்தா இத பிடி என கதிரவன் கையில் திணித்தால் ,கந்தனும்
 வாங்கிகொடா என சிபாரிசு செய்தான்.

அவன்  11  மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டான் ,சிறிது நேரத்தில் 
பூவழகியின்  தம்பி மணி வீட்டிற்கு வந்தான்,அவனும் எதோ வேலையாய்
நகரத்திற்கு வந்தவன் அப்படியே அக்காவை பார்த்துவிட்டு போகலாம் என 
இங்கு  வந்து வீட்டின் கதவை தட்டவும் பூவிழி வந்து கதவை திறந்து
உடன் கணவனை நோக்கி என்னங்க என்னங்க இங்க வாங்களேன்
வந்து யாரு வந்துருக்கான்னு பாருங்களேன் என் தம்பி மணி வந்திருக்கான் பாருங்க,என கூப்பாடு போட்டவள் வாடா வாடா வந்து
 உள்ள உக்கார் .என்னங்க மச மசன்னு நிக்கறீங்க போயி கூல்ரிங்க்ஸ் 
வாங்கியாங்க என கூறி ,மணி ,அம்மா ,அப்பா, மல்லிகா எப்படியிருக்காங்க 
அப்பறோம் நம்ம வூட்டு மாடு கண்ணு போட்டிச்சே காள கண்ணா ,கெடேரியா?
என பர பரப்பாயிட்டாள்.

    பேசிக்கொண்டே இதோ வரேன் எனக்கூறி கடைக்கு சென்றவள்,சிறிது 
நேரத்திற்கு பிறகு  சமைக்க ஆரம்பித்தவள் சரியாக
1  மணிக்கெல்லாம் கணவனையும் ,தம்பியையும் உக்காரவைத்து சாப்பாடு
பரிமாற்ற ஆரம்பித்தாள்,  அது சாப்பாடு அல்ல பெரும் விருந்து .தலை வாழை இலை போட்டு ,நீந்துவன ,பறப்பன,நடப்பன,என ஒரு பெரும் 
அசைவ விருந்தே படைத்தாள்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அக்கா தம்பி ,ஊர் கதை ,உறவு கதை என 
பேசிக்கொண்டிருந்தனர்,பின் மணி அக்கா,மாமா  நான் புறப்படுறேன்  என 
கூறி புறப்பட்டான் ,உடனே பூவிழி இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து 
அவன் பாக்கெட்டில் வைத்தாள் அது மட்டுமா வாசல் வரை வந்தவள் ,
எல்லாரையும் கேட்டோமின்னு சொல்லுடா ,என்னங்க நான் சொன்னது
 சரிதானே என கணவனை பார்த்து கேட்டாள் ம்....ம்  என தலையை மட்டும் 
ஆட்டிக்கொண்டான்  கந்தன் ,

        காலையில் நம் தம்பி வந்தபோது அவள் நடந்துகொண்ட விதமும் ,இப்போது 
அவள் நடந்து கொண்ட விதமும்,  கந்தனுக்கு ஆச்சரியம் மட்டுமல்ல
மனதிற்குள் கோபமும் ஏற்ப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.இருந்தாலும் 
அதை வெளிக்காட்டிக்கொள்ளாத கந்தன் பொருமினான் மனதிற்குள். 


iravu சாப்பிட்டப்பின் குழைந்தைகளை தூங்கியப்பின்  படுக்கையில் மனைவியை பார்த்த கந்தன் பூவு என மனைவியை பார்த்தான் ,என்னங்க
என்றாள்,நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்கமாட்டியே....
நீங்க சொன்னா தப்பா நேனைப்பனா? சும்மா சொல்லுங்க .

இல்ல ஊருல இருந்து தம்பி கதிரவன் வந்தான்,பசிக்குதுன்னு சொன்ன
அவனுக்கு பழைய சோறும்,வெங்காயமும் கொடுத்த,பஸ்சுக்கு காசு கேட்டா,
பணம் என்ன மரதிலேயா காய்க்குதுன்னு சத்தம் போட்ட,அதே சமயம்
மச்சான் மணி வந்தான்,அவனுக்கு சாப்பாடு என்ற பேருல ஒரு அசைவ விருந்து
பறப்பன,நீந்துவன,நடப்பன அப்படின்னு,செஞ்சு போட்ட ,போகும்போது
அவன் கேக்காமலேயே  200 ,ரூபாயை எடுத்து பாக்கெட்டுல திணித்து
அனுப்புற இது என்ன ஒரு கண்ணுல,வெண்ண ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு பெரியவங்க சொன்ன மாதிரி பின்னே அது சரியா.

என்னங்க நீங்க இப்படி சொல்லீட்டீங்க கதிரவன் யாருங்க நம்ம ஊட்டு புள்ள ,மணி யாருங்க கொண்டான்கொடுத்தான் அவன் ஊரூல போயி உங்களை ஒன்னு சொன்னான்னா யாருக்குங்க அசிங்கம்,
உங்க கௌரவத்த காப்பாத்துறது பொன்ட்டியாகிய என்னோட
கடமையில்லையா எனக்கூற  கந்தன் வாயடைத்து போனான்.


                                   வாய் கொழுப்பு சீலையால் ஒழுகுது  
                                *********************************************
ஒரு  சிறிய  கிராமம்தான்  திருநகரி அந்த ஊரில் குப்புசாமின்னு ஒரு
ஆடு மேய்க்கும் சிறுவன் இருந்தான்,அவன் அந்த ஊரிலுள்ளோர் ஆடுகளை எல்லாம் மேய்த்து அதில் கிடக்கும்,வருமானத்தை வைத்து பிழைத்து வந்தான்.

அவன் யாருமற்ற அனாதையாவான் ,அவனின்  பரிதாப நிலையை
கண்டு அந்த ஊரின் வயல்வெளியை ஒட்டி குடிசை போட்டு வாழ்ந்து வரும் காமாட்சி பாட்டி, குப்புசாமி கொண்டு வரும் தானியங்களை சமைத்து கொடுத்து வந்தாள்.

குப்புசாமியும் காமாட்சி பாட்டியை தன பாட்டிபோல கவனித்து வந்தான்,
பாட்டியும் பேரனைபோல் கவனித்து வந்தாள் ,அப்போது மழை காலம்
விறகெல்லாம் நனைந்து அடுப்பெறிக்க விறகில்லாமல் மிகவும் சிரமப்பட்டு
வந்தாள் ,ஒரு நாள் மதியம் ஆட்டுக்கேல்லாம் தழையை பறித்து போட்டு
விட்டு மழையில் நனைந்துகொண்டே சாப்பாட்டுக்கு வந்தான் குப்புசாமி .

  காமாட்சிப்பாட்டி ஈர விறகை வைத்து மண்டி போட்டு ஊதி ஊதி சமைக்க
சிறமப்பட்டுக் கொண்டிருந்தாள்,அந்த நேரம் குப்புசாமி  அங்கு வரவும் ,
பாட்டி அவனை பார்த்து கொஞ்ச நேரம் அங்க உக்காருடா பாட்டி சமைத்து
 தரேன் என்றாள்.

மழை வெளியில் கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்க்க பாட்டி புகையில் ஊதி ஊதி ஈர விறகோடு போராடிகொண்டிருக்கையில்
இயற்க்கை உபாதான
   

Saturday, 26 November 2011

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்



இந்நாட்டு மன்னரெல்லாம்
சாக்கடை ஓரத்திலே
சாப்பாட்டுக்கு வழியின்றி
வாடுகின்றனர்

ஒருவேளை உணவுக்கு
உயிரோடு போராடி
உருப்படியான வழி 
தேடுகின்றனர்

நாளெல்லாம் வெய்யிலிலே
மாட்டை உழைத்தாலும்
உயர்வுக்கு வழியின்றி
தவறான வழியை நாடுகின்றனர்

பிழைப்பிற்கு தடமின்றி
வறுமைக்கு வேலியின்றி
தடம் மாறி வாழ்விலே
வீழ்கின்றனர்

இல்லார்க்கு இல்லாமை தீர
எல்லோரும் முனைந்திடில்
கல்லாமை நீக்கியே நல்லதை
வெள்ளாமை செய்திடுவோம் 

Friday, 25 November 2011

மனித ஜாதியே



மனித ஜாதியே -நீர்
மனிதரல்லவோ
உரிமை கேளுங்கள் அந்த
உணர்வு இல்லையோ

அடிமை ஜனங்களை -நாம்
அவதிபடுவதோ
இக் கொடுமை தீரவே -எல்லாம்
கொதித்து எழுங்களேன்

உழைக்கும் வர்கத்தின் -உரிமை
பரிக்கப்படுவதோ
உணர்ச்சியின்றியே- மனிதம்
உறங்கிகிடப்பதோ

ஜாதி வேற்றுமை -நம்மில்
ஜாலமிடுவதோ
பேதமில்லையே யாரும் -ஒரு
தாயின் பிள்ளைகள்

கல்வி சாலைகள் -மண்ணில்
காசு பார்க்கவோ
களவு செய்வதை விட -இது
ஈனமஅல்லவோ

 மருத்துவம் இப்போ
மருந்துக்கில்லையே
மறந்தும் கூட -ஏழைக்கு
கிடைக்கவில்லையே

நீதி கூட ஏழை
வீட்டை அடையனும்
வீதி வீதியாய்-தவறுகள்
ஓட்டி விரட்டனும்

இல்லை என்போர்க்கு -எல்லார்
இதயம் இறங்கனும்
ஏற்ற தாழ்வுகள் -இல்லா
நாட்டை பார்க்கணும்

அனைத்து உயிர்களும் -உயிராய்
மதிக்க படும்வரை
உண்மை சுதந்திரம் -என்றும்
உண்மையில்லையே

நட்பு



மலருக்கும் வண்டுக்குமிடை
மகரந்த நட்பு
கடலுக்கும்  நதிக்குமிடை
நாணல் நட்பு

தாய்க்கும் சேய்க்குமிடை
உயிரே நட்பு
தந்தைக்கும் மகனுக்குமிடை
அறிவே நட்பு

தள்ளாத வயதில்
தடியும் நட்பு
தர்மம் செய்வோர்க்கு
மனமே நட்பு

மனிதனுக்கும் கடவுளுக்குமிடை
அருள்தான் நட்பு
மகாத்மாகளுக்கு
சேவையே நட்பு

உயிரே உனக்காக என்பது
உடல் நட்பு
உயிரோடு கலப்பது
உண்மை நட்பு

அரசியல்வாதிகளுக்கு
சந்தர்ப்பமே நட்பு
அறிவார்ந்தோர்க்கு
ஆயிரம் நட்பு

ஆயிரம் வழிகளில்
அமைந்திடலாம் நட்பு
அளவுக்கு மீறினால்
அதுவும் கசப்பு

இங்கொன்று பகர்வது
எனது பொறுப்பு
இயம்பாமல் இருப்பின்
இல்லை இனிப்பு

உயிரில் கலந்த ஒருவரின்
உண்மை நட்பும்
உறவோடு உயிரில் கலந்த
மனைவியின் வாழ்க்கை நட்பும்

கிட்டிடின் அதுவே ஆயிரமாயிரம்
சிறப்பினும் சிறப்பு
ஆஹா அமைவது
அவரவர் மனமதை பொறுத்து


   

Thursday, 24 November 2011

தம்பிபாட்டு



சின்ன சின்ன தம்பி -நான்
சொல்வதை கேள் தம்பி
காலையிலே எழுந்தவுட்டன் படிக்கணும் -பின்
காலைக்கடன் அனைத்தையுமே முடிக்கணும்

பற்களையே வெண்மையாக  துலக்கணும்  -பின்
அழுக்கு போக தேய்த்து நல்லா kulikkanum
பக்தியோடு தெய்வத்தையே வணங்கனும் -பின்
 பட்சனத்தையே மென்று நல்லா சுவைக்கணும்

தலைசீவி சலவை துணி உடுக்கணும்
கலையில சாலையிலே நடக்கணும்
நேரத்தோடு பாட சாலை அடையணும்
கோரசாக இறைவணக்கம் பாடனும்

குருவை நாம வணக்கம் சொல்லி மதிக்கணும் -நம்
குலம்விலங்க அருமையாக படிக்கணும்
சுட்டி நாம சுறுசுறுப்பாய் இருக்கணும் --நல்ல
குழந்தைகளோடு கூடி ஆடி மகிழனும்

நாளை உலகை ஆள நீயும் வளரனும் -நல்ல
பண்புகளை உசுரை போல மதிக்கணும்
ஏழைகளை கண்டா நீயும் இறங்கனும் -நாட்டில்
எல்லாரையும் குடும்பம்போல நினைக்கணும்



இவர்களும் மனிதர்களாம்



வரதச்சணை  என்ற  பெயரால்
பெண்களிடம் தன்னையே
விற்றுவிட்டு -தாலி
கட்ட நினைக்கும் -தரம்கெட்டவர்கள்

பணத்தை வாங்கிக்கொண்டு -படுக்கையை
பகிர துடிக்கும்  -மறவர்கள்

கொடி இடையாளிடம் பிடியலவாவது
தங்கத்தை எதிர்பார்க்கும் -கனவான்கள்

கொஞ்சக்கூட கூலி கேட்கும் -கொடூரர்கள்

சொல்லால் சுட்டெரிக்கும் -சுயநலமிகள்

மானத்தையும் மனசாட்சியையும்
மனைவியிடம் விற்று தட்சனை எதிர்பார்க்கும் -மானங்கெட்டவர்கள்

                     கைதடி

காசுக்காக காலனையே [எமன்] பூமியில்
காலூன்ற உதவும் கைத்தடிகள்

                மந்திரவாதி

மாமியார் கொளுத்தும்போது
வெடிக்காத அடுப்பு
மருமகள் கொளுத்தும்போது மட்டும்
வெடிக்கச்செய்யும் -மந்திரவாதி

Wednesday, 23 November 2011

லஞ்சம்



 லஞ்சம் நம் நாட்டில்
அடைந்துவிட்டது தஞ்சம்
ஊழல் செய்யும் எத்தர்களுக்கு
வித விதமாக மஞ்சம்

தினம் பாடுபடும் மக்கக்ளுகோ
அடுக்கடுக்காக வஞ்சம்
லஞ்சம் இல்லா நிலைகளை
பார்க்க துடிக்குது தினம் நெஞ்சம்

ஒட்டு கேக்க வரும்போது தலை
வெளியே காட்டுவார் கொஞ்சம்
வோட்டு வாங்கி உயரே இருப்பவர்
ஒருவருக்கொருவர் போட்டி போடும் கஞ்சன்

கல்லூரியிலே லஞ்சம்
கடை வீதியிலும் லஞ்சம்
ஆக பூர்வ வேலைகளுக்கெல்லாம்
அளவிலாத லஞ்சம்

எல்லாவற்றிலும் கலப்படம் -லஞ்சத்தால்
எடுத்து கேட்க மனம் அல்லல் படும்
லஞ்சம் எனும் பெரும் சுமையாலே -நாடு
வளர்ச்சியின்றியே அவதிப்படும்

வீரமாக பேசிடுவர் நேரில் 
விளக்கம் கேட்டால் எசிடுவர்
தவறுகளை தட்டிக்கேட்பவர்
முகத்திலே கரி பூசிடுவர்

உரிமை குரல்தனை எழுப்பிடுவோம்
ஊழலாளிகளை அழித்திடுவோம்
கருப்பு பணத்தை வெளியே கொணர்ந்து
தாய் திரு நாட்டை காத்திடுவோம் 

சகதி வாழ்க்கை






அளவில்லா ஆசையினாலே -மனிதன்
அமைதி இழக்கிறான் பாரு
நிலையில்லா பூமியின் மேலே -தினம்
நிம்மதி என்பது ஏது

உண்மை இல்லாதொரு வாழ்க்கை -யாரும்
உயரே உயரே வாழ்ந்தாலும்
கண்மூடி திறப்பதர்க்குள்ளே -யாவும்
மன்மேடாய் போவது உறுதி

ஊருக்குள் நல்லவன் போலும் -உயர்
ஒப்பற்ற பக்திமான் போலும்
நேருக்கு மறை தீங்கு செய்து -இப்
பாருக்குள் வாழ்ந்தவர் யாரு

ஊருக்கு உபதேசம் செய்து -வெறும்
பேருக்கு வாழ்வை வாழ்வார்
சேறுக்குள் வாழ்வதைவிடவே -இவர்
செத்து மடிவதே மேலாம்

உண்மை அழிவதுமில்லை -இவ்
உலகம் மறப்பதுமில்லை
நல்லோர் வாக்குகள் வழியே  -நாளும்
நடந்தே வெற்றிகள் பெறுவோம்

Tuesday, 22 November 2011

மே தினம்



உள்ளத்தின் குமுறலை ஒளியாக்கி
உலகத்தின் பார்வையை திசை மாற்ற
எண்ணத்தில் எல்லோரும் ஒன்றாக
எழுப்பிடும் ஓசையே மே தினம்

உழைக்கின்ற வர்கங்கள் ஒன்றாக
உரிமை குரல்தனை எழுப்பிட
எத்தடை வந்தாலும் எதிர்நோக்கி
எழுகின்ற நாளன்றோ மே தினம்

தொழிலாளர் குருதியை பணமாக்கி
சுக வாழ்க்கை வாழ்ந்திடும் முதலாளி
முக மூட்டி கிழித்தே வெளியேற்ற
எழுச்சியின் புரச்சியே மே தினம்

தொழிலாளி உயர்ந்திட போராடி
உயிர் விட்ட ஒப்பற்ற  தியாகிகள்
குருதியில் ஊறிய கொடியையே
உலகிற்கு தந்திட்ட  மே தினம்

செங்கொடி பட்டொளி வீசிட
செங்குருதியின் பயனை நாம் அடைந்திட
மே தினம் போற்றியே வணங்குவோம்
மேதினி போற்றிட வாழுவோம்


 

Friday, 18 November 2011

தமிழ்ப்பற்று


[இந்த  பாடலை பாரதியின் வந்தே மாதரம் என்றுயிர் என்ற மெட்டில் பாடி மகிழவும் ]


வேற்று மொழி இங்கு வேரூன்றி வளர்வதை
பார்த்திட்டோம் பாடி வாழ்த்திடோம்
வேரூன்ற வருவதை வேருடன் கலைந்துமே
நசுக்குவோம் -தீயில் பொசுக்குவோம்

ஆயிரமாயிரம் அள்ளிக்கொடுத்தாலும்
ஆவதோ தமிழ் சாவதோ
அண்டை மொழியிங்கு ஆள நினைப்பதை
ஓட்டுவோம் துரத்திக்காட்டுவோம்

மத்தி மொழிகளுக்குத் தமிழடிமை
ஆகுமோ நெஞ்சு வேகுமோ
எத்தர் மொழி எங்கள் தைத்திருனாட்டிலே
ஓங்குமோ தமிழ் தூங்குமோ

கன்னித்தமிழ் விட்டு கள்ள மொழியினை
கர்ப்பதோ மானம் விர்ப்பதோ
கண்ணை குருடாக்கும் கண்ணாடியை ஏற்று
அணிவதோ அதற்க்கு பணிவதோ

செங்கதிர் போலவே செந்தமிழ் உயர்ந்திட
செல்லுவோம் களத்தில் வெல்லுவோம்
இந்தியை ஒழித்துமே எம்தமிழ் வானுக்கு
 எட்டுவோம் முரசு கொட்டுவோம்


                        தமிழ் அன்னை


[இந்த பாடலை பாரதியின் நெஞ்சில் உரமுமின்றி என்ற பாடலை போல் பாடி மகிழவும் ]



தமிழ் எங்கள் அன்னை என்பர்
தமிழ் மொழி உயர்ந்த்ததென்பர்
தாய் மொழிக்கீனம் வந்தால் -கிளியே
 தட்டிக்கேலாரடி

அண்டை மாநிலத்தார்
அவர் மொழி புகுத்தவந்தார்
 சித்தம் தெளியாமலே -கிளியே
சேர்த்து மகிழ்வாரடி

நன்மைகள் செய்வோமென்று
பேய் மொழி புகுத்தவந்தார்
கொத்திகுதர்வோமேன்று -கிளியே
கூவி எதிர்க்காரடி

தன்  தாயை தனளிலிலே
தள்ளி பொசுக்கும்போதும்
தடுத்து நிருத்தாரடி -கிளியே
தரம் கெட்ட மாக்களடி
பரமொழிக்கடிமை
பாங்குடன் செய்வோமென்று
தமிழ் பற்றுடன் கூறாரடி-கிளியே
பச்சோந்தி கூட்டமடி

இந்தி எனும் பேயை
இங்கிருந்து துரத்துவதே
கடமையாய்  கொல்லாரெல்லாம்-கிளியே
தாயையே மதிக்காரடி

























































































































கலஞ்சருக்கோர் கவிதாரம்




கருணாநிதி


அஞ்சுகம்  அம்மையாரின்
அரும் பெரும் புதல்வா
அஞ்சாது பாடுப்பட்டு -தமிழர்
அகத்திலே குடி கொண்டாய்

ஆற்றல் மிக்கவராய் -தமிழரை 
ஆக்கவே வேண்டுமென்று
ஆசையை மனதிற் கொண்டு -உரை
ஆற்றலை மேற்கொண்டாய்

இநதியை   தினித்திட்டால் இலக்கியம்
பாழ்படுமென்று  என்று
இரயில்  பாதையில் தலைவைத்து -தமிழ்
இலக்கியத்தை காத்து நின்றார்


ஈகை அற்ற நெஞ்சர்களும்
ஈரமற்ற நஞ்சர்களும்
ஈந்து வாழ் என்லம்பி
ஈ வே ரா வழி நின்றாய்


உலக அரங்கிலே -தமிழ்
உயர்ந்து நிற்க வேண்டுமென
உழைத்தே வாழ்ந்து வரும்
உத்தமரும் நீரன்றோ

ஊளையிடும் பேர்களிடையே-சிலர்
ஊமையாய் வாழ்ந்து வர
ஊர் ஊராய் திரிந்தே நீ -தமிழ்
ஊட்டியே உயர்த்திவிட்டாய்

எதையும்  தாங்கும்  இதயம்
  எல்லோர்க்கும்  வேண்டுமென்று
எதிர்ப்பட்ட தடை தாண்டி
எந்திரம் போல் பாடுப்பட்டாய்

ஏணியாய் நீ நின்று -தமிழரை
ஏற்றவே வேண்டுமென்று
ஏலன வெஞ்சிறைகள்  -பல
ஏகியே மீண்டவன் நீ

ஐம்பத்தி ஆறு சேசம்-தமிழை
அறியவே வேண்டுமென்று
ஐம்பெரும் காப்பியத்திற்கு
அழகு நடை கொடுத்தாய்

ஒய்யார தமிழ் நடை
ஒற்றுமையில் தமிழ் கடை -அதனால் மக்கள்
ஒருங்கிணைந்த நிழலில் நிற்க -உயந்து வந்த
ஒரு குடை நீ

ஓங்காரமுள்ள தமிழ் -உலகில்
ஒங்க செய்திடவே -நீ
ஓடி உழைத்த இடம்
ஓரிடமா ஈரிடமா

ஔவைகோர் கொன்றைவேந்தன்
அறிவிற்க்கோர் கொள்கைவேந்தன்
எங்களுக்கோர் தமிழ் வேந்தன்
உங்கள் வழியே நாங்கள் சார்ந்தோம்  

Wednesday, 16 November 2011

மழலைகள்

குழலினிது யாழினிது என்பர்  தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் -இது கற்று அறிந்தோர் வாக்கு

இப்போ நாம குழந்தைகளை பற்றி
எனக்கு தெரிந்த சில தகவல்களை
உங்களோடு பகிர்ந்துகொள்வதில்
மகிழ்ச்சி அடைகின்றேன்

குழந்தைகள் பிறந்த  உடன் அழ வேண்டும் அப்படி அழவில்லை எனில்
உடனே மருத்துவரை அணுக வேண்டும்

குழந்தைகள் மிக மென்மையானவர்கள் ஆதலால் மிகமென்மையான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்

குறிப்பாக குழந்தைலோடு சற்று வளர்ந்த குழந்தைகளை
தனிமையில் விளையாட ஒருபோதும் அனுமதிக்க கூடாது

ஈராமான ஆடைகளை உடனுக்குடன் மாற்றி விட வேண்டும்

வெப்பமான இடத்திலோ மிக குளிரான இடத்திலோ குழந்தைகளை
பராமரிக்க கூடாது காரணம் வெப்ப மற்றும் குளுமை நோய்கள்
தாக்காமல் தற்காத்துகொள்ள இயலும்

கண்டிப்பாக தாய் பால்தான் புகட்ட வேண்டும் அப்போதுதான்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் அறிவாளிகளாக
வளற இதுவே அடித்தளமாக அமையும்

தாய் பால் கொடுப்பதால் தாய்மார்களின் அழகும் ஆரோக்கியமும்
கூடும்  என்பது   அறிவியல் உண்மை

 குழந்தைகள்  வளரும் அறையில் மிக மென்மையாக நல்ல இசை
ஒளிக்க செய்வது , சிறப்பாக    குழந்தைகள்   வளற உதவுதாக
கணிக்கப பட்டுள்ளது

 குழந்தைகளை அவர்கள் வழியிலேயே விட்டு தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக கண்காணிப்புடன் வளற நாம் உறுதுணையாக
இருக்க வேண்டும்

தூய்மை ,அன்பு ,நேர்மை,பாசம்,நேசம்,நல்ல சொற்கள் ,கலாச்சாரம் ,பக்தி ,
நாட்டுப்பற்று ,வீரம் ,விவேகம் ,தோழமை ,கலைகள்,உறவுகள்,போன்ற நல்ல
நல்ல பண்புகளை சரியான விகிதாச்சாரங்களில் கற்று தறுதல் பெட்ரோறின்
கடமைகளாகும்

  குழந்தைகளின் வளசியிலும் ஆரோக்கியத்திலும் பெற்றோருக்கு அதிகம்
அக்கறை உண்டு  ஆதலால் பயன்படுத்தும் துணிகள் காட்டானாக இருப்பது
avasiyam ,melum துணியை   அலசும் போது டெட்டால் கலந்த தண்ணீரில் அலசி சூரிய
ஒளியில் உலர்த்த வேண்டும்  அப்போதுதான் கிருமிகள் இல்லா தூய்மையான
துணிகள் கிடைக்கும்

குழைந்தைகள் கைக்கு எட்டும்தூரத்தில கார்க் ,நாணயங்கள் ,ஊசி ,பெண் ,போன்ற ஆபத்து விளைவிக்கும் பொருள்களை வைக்க கூடாது

குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் எதையும் கற்றுக்கொள்ளும்
ஆர்வமுடையவர்கள் ஆதலால் நல்லவற்றையே கற்றுக்கொடுங்கள்
தீயவற்றை அவர்கள் எதிரில் பேசுவது,நடப்பதை தவித்து விடுங்கள்
திட்டுவது,பொய் பேசுவது ,ஆபாசங்கள் ,திருட்டு ,ஏமாற்றுவது ,சூது
,ஆரோக்கியமற்ற  விவாதங்கள் ,போன்றவையும் தவிர்க்க வேண்டியவையே ம்

குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வயதில் கேள்விகள் கேட்பார்கள்
தயவு செய்து சரியான பதில்களை தாருங்கள் .அப்போது சமாளிக்கின்றேன் என்று எதையும் தவறானவற்றை கூறி குழந்தைகளின் எதிர்காலத்தை
நாமே கெடுத்துவிடலாகாது இதில் கவனம் தேவை -இன்னும் நாளை

  kuzhanthaikalin விருப்பங்கள் ethuvenru அறியவே முடியாது kaaranam பார்கின்ற ovvonrai பற்றியும் அறிய aasai படுவர் அது samaiyam பெற்றோராகிய  நாம் பொறுப்புள்ள thaai thanthaiyaaga நடந்து கொள்ள நாம் செய்ய ventiyathu என்னvenraal
பொறுமையாக ovvonraiyum விளக்கி கூறுதல் miga நுட்பமான அவசியம்

ilam கன்று பயம் ariyaathu என்பது எல்லோருக்கும் தெரியும் ஏனென்றால்
நாம் katanthu வந்த பாதை ethuvenru நமக்கே தெரியும் avatrai நாம் சிந்தித்து பார்த்து nallavai கெட்டவை etuththu உரைத்தல் அவசியம் onrai நாம் purinthu kolluthal வேண்டும் naame இளமையில் எப்படி இருந்தோம் nammai பெற்றோர் எப்படி valarththanar அதே போல இல்லை இல்லை அதை விட இந்த விஞ்சான உலகத்திற்கு etra வாறு நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் அதற்காக 
எதையும் thinikka கூடாது

Monday, 14 November 2011

ரயில் பயணம்






எங்கேயும் பார்த்ததில்லை
யாருமே சொந்தமில்லை
ஆளுக்கு ஆள் பார்த்துக்கொள்வோம்
அது முதல் நட்பாவோம்

பார்த்து பேசி பழகிடுவோம்
பகிர்ந்து கூட உண்டிடிவோம்
அடுத்தவர்க்கு உதவி செய்தே
அரவணைப்பாய் சென்றிடுவோம்

ஊர் கதையை பேசிடுவோம்
ஊர் பேர் அறிந்துகொள்வோம்
மணித்துளிகள் கரைந்து செல்லும்
மணித்துளிகள் பின்னே செல்லும்

பலத்தலைகள் கூடினாலும்
பல கலைகள் பினைந்துகொள்ளும்
புது உலகில் இருப்பது போல்
புரிந்தே எல்லாம் பழகிடுவோம்

அன்பாய் இணைந்திடுவோம்
 அடுத்தவரோடு கலந்திவோம்
அவறவர் தடத்தில் இறங்கிக்கொள்ள
அனுமதியோடு கலைந்திடுவோம்

வெறுமையாய் உணர்த்திடுவோம்
அவாறவர் பணியில் மூழக்கிடுவோம்
ரயில் சிநேகிதம் ரயிலோடு
உறவும் உடமைகளும் நம்மோடு

ராக்கெட்டில் ஏறும் விலை



விலைகள் ஏறுது ரகேட்டிலே
பணம்தான் இல்லை நம் பாக்கெட்டுலே
அரசியல்வாதிகள் பேச்செல்லாம்
ஆதாயம் தேடும் நோக்கத்திலே

அம்மா பசியென
 வாடிடும் மக்கள்
விலைகள் குறையுமா
என்ற ஏக்கத்திலே

ஆளுக்கு ஒரு கட்சி
மூளைக்கு ஒரு கட்சி
அவரர் கொடிகளும்
பறக்குது உயரத்திலே

ஆதரவின்றி அல்லல்
படும் ஏழை
அகாரம் இன்றி
தவிக்குறான் துயரத்திலே

எடுத்ததுக்கெல்லாம் ஒரு இயக்கம்
அரசிடம் எடுத்து கேட்கவே தயக்கம்
ஏறிடும் விளைவாசியினாலே -ஏழை
பசியால் அடையுறான் மயக்கம்

நல்ல திட்டத்தை வகுத்திடுங்கள்
ஏழை நிலைதனை கருதி
இல்லையேல் மானுடம் பசியால்
அழிந்திடும் இது உறுதி


        
        
                       ஏக்கம்
                    -------------


காலம் என் நெஞ்சத்தை வருடும்
காலனை ஒத்த விலைகளினாலிலே

உருப்படியின் விலைகளை கேட்டால்
உயிருள்ள ஜீவனும் உரையும்

உயரத்தில் தெரிவதெல்லாம் உரமற்று
உயர்ந்துவிட்ட உளமற்ற விலையேற்றம்

எண்ணினால் எதிர்காலத்தை
எண்ணங்கள் மறக்கும் இவ் உலகத்தை

என்றுதான் மாறும் இன்றைய நிலை
எல்லோருக்கும் தோன்றும் இன்பத்தின் கலை

விலை வாசி குறையுமா என்றே ஏக்கம்
அதுவரை இல்லையே ஏழைக்கு தூக்கம்     

ஏற்றம் எப்போ


ஏர் பிடிச்ச உழவனுக்கு
ஏத்தம் எப்போங்க -இத
எடுத்து நாம கேட்டுப்புட்டா
என்ன தப்புங்க

எருதை பூட்டி உழவனொருவன்
இறை ஓட்டுறான் அந்த
ஏழையின் உழைப்பிலொருவன்
காரை ஓட்டுறான்

கலை எடுக்க வந்தவர்க்கு
கஞ்சி கெடைக்கல -உழவன்
காசிளொருவன் காலையில
காப்பி குடிக்குறான்

கூலி உயர்த்தி கேட்டுப்புட்டா
குத்தமெங்குறான் -ஏழை 
கூழு கூட கெடககலேன்னு
நித்தம்  ஏங்குறான்

ஏர் உழவன் இந்நாட்டின்
முதுகுகெலும்பு  என்குறான் -உழவன்
உழைத்து உழைத்து முதுகுகெலும்பு
வளைந்து கெடக்குறான்

அடுக்கடுக்காய் பணத்தை பதுக்கி
அரசை ஏய்க்குறான் -உழவன்
அடுத்த வேலை உணவில்லாமல்
வாடி   வதந்குறான்

                உழவன்

பஞ்சமெனும் தரித்திரம் போக்கி
பசுமை எனும் சரித்திரம் படைத்து
வறுமை எனும் நோயை நீக்கி
பெருமையை நாட்டுக்கு தரும்
பொறுமையானவனே உழவன்

           அட்சய பாத்திரம்

நஞ்சையும் ,புஞ்சையும்
பஞ்சத்தை போக்கி -வயிற்றிற்கு
கஞ்சியும் கொடுத்து -உடுக்க
பஞ்சையும் கொடுக்கும் அட்சையபாத்திரம்

அட்சையபாத்திரம் ஆளும் முறையில்
அதிசய பத்திரம் -அதில்
உடல் அலைச்சலை கொடுத்து -விளைச்சலை
பெருக்கி -மன
உளைச்சலை நீக்கிடும் உழவனுக்கே -நம்
ஆயிரமாயிரம் சோத்திரம்


              நன் செய் [நஞ்சை ]
நஞ்சை எனும் வஞ்சிக்கொடி
காஞ்சி தர வந்தால்
அல்லல்படும் ஏழைகளின்
நெஞ்சிலே நிறைந்தால்

ஊருக்கெல்லாம் உணவளித்து
உள்ளம் மகிழ்ந்தாள்
பாரில் அவள் பசுந்தளிறாய்
பஞ்சமத்தை களைந்தால்

வேர்வை சிந்தி உழைப்பவருக்கு
வெள்ளாமை தந்தாள்
சோர்வை நீக்கி உழைப்பவருக்கு
இல்லாமை களைந்தால்

Saturday, 12 November 2011

குருதி ஈழம்



சிங்களத்து தீவினிலே
சிங்க தமிழ் வாடுது பார்
ஈழத்திலே நடக்கும் துயர்
என்னவென்று யாரறிவர்

துப்பாக்கி இடி இடிக்க
தோட்டாக்கள் மழை பொழிய
யாழ்ப்பாண வீதியிலே
ரத்த வெள்ளம் பாயுது பார்

வீட்டினுள் இருக்கும் -வீரத்
தமிழ் மகளை
வீதியிலே கொணர்ந்து -அவர்
விளையாடும் கொடுமையை பார்

காவியம் காத்து வந்த
கற்பு கலவாவதை பார்
பாவங்கள் அறியா சிறுவர்
படுகொலைகள் நடப்பதை பார்

சிங்களரின் இன வெறியால்
தமிழினமே அழியுது பார்
தான் ஆண்ட நாட்டிலயே
அகதியான கொடுமையை பார்

பாரே  பார்துதிருந்தும்
படுகொலைகள் நடப்பதை பார்
பாரா முகம் வேண்டாம்
பாரே உன் பார்வையினால்

பயந்து வாழும்
தமிழர்களை
பாதுகாப்பாய் கொணர்ந்து
இல் சேர்

கடலுக்கு ஓர் வேண்டுகோள்





கடலம்மா கடலம்மா -நீ
காவு கொண்டது
2லச்சம் உடலம்மா

கரையோரம் வாழ்ந்தவரை -வாழ்வில்
கரையேற வைத்தவள் நீ
காற்று வாங்க வந்தவரை -தன்
கரங்களால் தாலாட்டி
மகிழ்ந்ததும் நீயே

உப்பாகி,உணவாகி,
உயிர்க்காக்கும் மருந்தாகி,
முத்தாகி, மீனவர் வாழ்வின் வித்தாகி,
உலகிற்கு வழியாகி
வந்தவளும் நீயே

அம்மா நீ குதித்து குதித்து
அலையாக   வந்த போதெல்லாம்
விளையாடி மகிழ்ந்தோம் -அதுவெல்லாம்
கனவாகி போனதேன் ?

அலையே நீ உன் அன்பு கரங்களால்
அரவனைத்ததை விடுத்து
26 / 12/2005 அன்று
சுனாமி என்ற அசுரக்கரங்களால்
மலையாக உயர்ந்து
மக்களை மண் மேடாய்
ஆக்கியது ஏன்?

ஊரையும் உறவையும்
உன்னோடு கவர்ந்து -எங்களை
மீளாத்துயரத்தில் அமிழ்த்தியது ஏன் ?

நாங்கள் கண்ணீரும் வற்றி
கருவாடாய் ஆனோம்
செந்நீரை சிந்தி
உருக்குலைந்து போனோம்

போதும் உன் சீற்றம்,
பொறுமையாய் இரு,
அன்பாய் இரு,அரவணைத்து செல்
எப்போதும் அன்னையாய்
எமை காத்து நில் ;;;

Thursday, 10 November 2011

கம்ப்யுட்டர்





படிப்படியாய் படித்து  படித்து
பட்டம் வாங்குறான் -அவன்
படிச்சிப்புட்டு வேலை தேடி -பல
படிய மிதிக்குறான்

வேலையுல விஞ்சானத்த
புகுத்திபுட்டங்க -ஆனா
வேலையில்லா திண்டாத்த பெருக்கிபுட்டாங்க

கம்ப்யுட்டர் பத்துபேரின்
பணிய செய்யுதாம் -ஆனா
கணக்கு பாத்த பத்துபேரின்
வேலை போகுதாம்

வித விதமாய் படிச்சி படிச்சி
பட்டம் வாங்குறான் -அவன்
நோ வேக்கன்சி போர்ட பார்த்து
நொந்து சாகுறான்

கருவிகளை பிடிக்க  கூட
கம்பியூட்டர் தாங்க -ஆனா
கருவி பிடிக்க படிச்சவனுக்கு
தின்ட்டம்தாங்க

அச்சு கோர்த்து பார்க்க கூட
கம்பியூட்டர் தாங்க- இப்ப
அரண்மனையில்  வேலை செய்ய
 கம்பியூட்டர் தாங்க

தேச படையில் கூட கம்பியூட்டர்
ஆட்சி நடக்குதாம்
கம்பியூட்டர்  வேலை இல்லார்
தொகைய இப்ப கணிக்க உதவுதாம்

21 நூற்றாண்டில்
இனிமை போகுது -இந்த
இயந்திர மய உலகத்தில்  இப்ப
இதான் நடக்குது   

சமுதாயத்தின் சாபக்கேடு

அன்னையை போல் ஒரு
தெய்வம் இல்லை
தன்னையே தாய்க்குலத்திற்கு
அர்ப்பணிப்பேன் என்று
வாய் வீராப்பாக பேசிடுவார்

தாலி கட்டிய மனைவி
தான்  வரும்போது
தனம் கொண்டு வரவில்லை என
ஏசிடுவர்

பெண்கள் எந்திரமாக உழைத்திடனும்
எது கேட்டாலும் கொடுத்திடனும்
எனும் தந்திரவான்கள் தரனில
தல வெளியே காட்ட  விடலாமா

தேவதை வரும் மனைவி
சீதனம் கொண்டு வராவிடில்
கேவலமாக பேசும் மனிதன் தான்
தீவிர தேச துரோகிகளே

வரதட்சிணை கொடுமையினால்
வாடிடும் ஏழை பெண்களுக்கு
வாழ்வளிக்க வருபவரே -இவ்
வையகம் தனிலே  சிறந்தவரே

பெண்கள் கொடுமை ஒழிந்திடனும்
(வரன் ) தட்சிணை அழிந்திடணும்
இளைய சமுதாயம் ஒன்று கூடி -இச்
சாபக்கேட்டை கலைந்திடனும்   

அவளும் ஆணுக்கு நிகரே

பெண்கள் என்றிடில் அவள்
பேதை இல்லையே
பேறுகள் பெற்ற  பல
மேதை இல்லையோ

வாய்ப்பு கிட்டிடின் பெண்
வானை எட்டுவாள்
பாட்டில் பாரதி அன்று
பாடி  வைத்தாரே

அடிமை என்று நாம்-அவளை
அடக்கிடலாமோ
ஆளத  தகுந்தவள் -என்பதை
மறந்திடலாமோ

உன்னை பெற்றவள்  -உன்
மகனை பெற்றவள்
தன்னை பணயமாய்  -வைத்து
தாயும் ஆனவள்

விண்ணை எட்டிட்டால்  -இன்று
விதியை வென்றிட்டாள்
கல்வி பெற்றிட்டால்  -பல
கலையும் கற்றிட்டாள்

ஆணுக்கு நிகரென -அவளும்
நிமிர்ந்த்திட்டால்
வீணுக்கு நீயும் -அவளை
வீழ்த்தி பேசாதே ..

Wednesday, 9 November 2011

முத்துக்கள் முப்பது 1



1. சிரிப்பதானால் கபடம் இன்றி சிரியுங்கள்
2 .சிந்திப்பதானால் இடையூறின்றி சிந்தியுங்கள்
3   செயல்படுவதனால் முழுமனதோடு செயல்படுங்கள்
4   விட்டுக்கொடுப்பதானால்  தடை  இன்றி விட்டுக்கொடுங்கள்
5   உதவி செய்வதானால் எதிபார்ப்பின்றிஉதவி செய்யுங்கள்
6   காதலிப்பதானால் களங்கமின்றி காதலியுங்கள்
7    போராடுவதானால்   வெற்றி கிட்டும் வரை போராடுங்கள்
8   பேசுவதானால் இனிமையானவற்றை பேசுங்கள்
9    நடிப்பதானால் நம்பும்படி நடியுங்கள்
10  பொய் பேசுவதானால் கெடுதளின்றி  பேசுங்கள்
11  பாடுவதானால் ரசிக்கும்படி பாடுங்கள்
12  உன்னுவதானால் சுவைத்து  உண்ணுங்கள்
13  உரையாடுவதானால் சர்ச்சை இன்றி உரையாடுங்கள்             
14   உறங்குவதானால் சலனமின்றி உறங்குங்கள்
15   வாழுவதானால் பகையின்றி வாழுங்கள்
16   கூடுவதானால் அன்பானவrotu  கூடுங்கள்
17  முன்னேறுவதானால் பொராமை இன்றி  முன்னேறுங்கள்
18   பிராணிப்பதானால் துணையோடு பிறையானியுங்கள்
19   தனி வழியானால் துணிவை  துணை கொள்ளுங்கள்
20   வாக்களிப்பதானால் செயல் படுவோர்க்கு  வாக்களியுங்கள்
21   உறுதியலிப்பதானால் செயல்படுத்துவதை உறுதியளிங்கள்
22   உறவாடுவதானால் உளமாற உறவாடுங்கள்
23   உழைப்பதானால்  உய ர்வுக்காக உழையுங்கள்
24    எண்ணுவதானால் உயர்வானவற்றை  எண்ணுங்கள்
25    போட்டியிடுவதானால் தகுதியானவரோடு போட்டியிடுங்கள்
26    ரசிப்பதானால் ரசனையுள்ளவற்றை  ரசியுங்கள்
27    படிப்பதானாள் பயனுள்ளவற்றை படியுங்கள்
28    வழிபடுவதானால் தூய    மனதோடு வழிபடுங்கள்
29    கற்ப்பதானால் காலவரையின்றி கற்றிடுங்கள்
30    நேசிப்பதானால் தாய் நாட்டை நேசியுங்கள்  

 

ஹைஹூ 2









அரக்கிலோ  வேண்டுமென
கூண்டினில் ஒன்றை பிடித்து
அறுத்தான் முதலாளி

அப்பாட பிழைத்தோம் என
பெருமூச்செறிந்தது அடுத்து
அறுபடுவோம் என்பதறியாத
கறிக்கோழி


   

Tuesday, 8 November 2011

பஞ்சம்


காலைலைல கதிரவனும்
 கண் விழிக்கல ஆனா
கண் விழிச்ச
 ஏழை ஜனம் கதிரருக்குது

நாளு பூரா வேலை  செஞ்சும்
  கூலி கிடைக்கல இதில் 
நாணயத்த  சேர்த்தவனோ
 கூத்தி  பிடிக்குறான்

குடும்பத்தோடு வேலை   செஞ்சும்
 பஞ்சம்தானுங்க
 பணத்தைகுவித்து வைத்த
கயவனுக்கு மஞ்சம் ஏனுங்க 
ஏழை  ஜனம் வீதி ஓரம்
முடங்கி கிடக்குது -இதை
விரட்டி ஒருவன்
  கூட்டம் போட்டு  புத்தம் பேசுறான்


பஞ்சத்துல வாழ்பவருக்கு
பசியும் தீரல இதுல
பஞ்சாயத்து தேர்தலென்று
வசியம் செய்யுறான்


பஞ்சாயத்துல ஜெயிச்சவர
பாக்கமுடியில  அப்படி
பாக்கபோனா ஆள வச்சி
 விரட்டி adikkuraan 

காதல்


கல்லான இதயத்தில் கன்னி
 ஒருவள் காற்றாக புகுந்துவிட்டால்
புகுந்தவள்  இதயத்தை
புரியாத மொழி பேசி
 பூவாக மாற்றி விட்டால்
  
உயிரே உனக்காக என்று  கூறி
 என்உயிரையே பறித்து  விட்டால்
 பறித்த  என் உயிரையே
 பருந்துக்கு  இரையாக
பாதையில்எரிந்து விட்டால்

இதயத்தை பறித்தவள்
இன்னொருவர் சோலையில்
இதயத்தை இழந்தவன்
தவிக்குறான் சாலையில்

இதுவா காதல் ??? 

Sunday, 6 November 2011

ஹைக்கூ -1

ஆடையை அவிழ்க்கும் போதே 
அழுகை  வந்தது 
வெங்காயம்!

வீட்டுக்கு  ஒரு விளம்பரப் பெட்டி 
தொலைக்காட்ச்சி  பெட்டி 



பச்சனத்தை உண்டு விட்டு
பகல் கொள்ளை அடிக்க
குடும்ப படைகளை கூட்டி வந்த ராஜகுமாரன்கள்
பெண் பார்ககும் படலம்

சா(தீ)

சாதி என்னும் சுடு
 நெருப்பை ஏற்றி விட்டு 
பின்னர் காலில் சுட்டு
 அவதியும் படுவதுண்டோ

சாதியில் தாழ்ந்தவரை
தரத்தினில் குறைந்தவரை 
வீதியில் வேட்டி கட்டி
நடக்கவும் கூடாதென்று

ஆதியில் சொல்லி வைத்த
 அக்கிரமக்காரர்கள் 
நீதி இன்றி கூறி
 நெறிகளை சாகடித்தர்


சாதியில் உயர்ந்தவருக்கு
 பாதி கை அதிகமுண்டோ 
தரத்தினில் குறைந்தவர்க்கு
 சிரத்தில்தான் குறையுமுண்டோ


இல்லை இல்லை பிரம்மனும்
அதுபோல் படைத்ததில்லை

சுரத்தினில் பாட்டமைத்த
தரத்தினில் உயர்ந்த அவ்வை 
கரத்தினால் எழுதிவிட்டார்
இட்டார் பெரியோர் என்றும் 
இடாதார் இழிகுலத்தார் என்றும்


பல கோரை புனைத்தால்
பாயாகலாம் 
பல விறகு எரித்தால்
 பெரும் தீயாகலாம்

இப்படியே நாம் இருந்தால்
 நன்மை ஏதடி
எல்லோரும் சேர்ந்து விட்டால்
 கவலை  ஏதடி ...!!



                                 உறக்கம்


இரவில் எண்ணம் எங்கோ பறக்கும்
இன்பம் துன்பம் இரண்டும் மறக்கும்

ஆசை பாசம் அனைத்தும் துறக்கும்
ஆனந்தமான தூக்கம் பிறக்கும்

கனவில் கதைகள் ஆயிரம் பிறக்கும்
காவியம் போலே கனவுகள் irukkum

இனியதென்றால் எண்ணm sirakkum
துயரமென்றால் வாழ்க்கை வெறுக்கும்

அது  முதல் கண் தூக்கத்தை  வெறுக்கும்
moodikkolla   kankal marukkum