Monday, 2 January 2012

தானே புயல்



புதுமை கண்ட புதுவை -பலருக்கு
புகலிடம் தந்த புதுவை
புதுமை கவிஜனாம் சுப்புரத்தினதாசனை
பூமிக்கு தந்த புதுவை

சுற்றுலா வந்தவரை சுண்டி
இழுத்த புதுவை
சுனாமி வந்த போதும் -மக்களை
சுணங்காமல் காத்த புதுவை

வங்க கடலோரம்
சிங்கம் போல் நின்ற புதுவை
மதங்கள் கடந்தே -நல
மனித நேயம் காத்த புதுவை

அழகு பதுமை போல
அற்புதமாய் அமைந்த புதுவை,
சுந்தர வீதிகளை
தன்னகத்தே கொண்ட புதுவை

சொல்லாலும்,மொழியாலும்,
ஒற்றுமையை கண்ட புதுவை,
எல்லோரும் வந்துச்செல்லும்,
எளிமையை கொண்ட புதுவை

ஆண்றோரையும், சான்றோரையும்,
அரவணைத்து நின்ற புதுவை
மதங்கள் பலவிறுந்தும்,
மாற்றமே இல்லா புதுவை

இத்தனை சிறப்பிருந்தும்
தானேவெனும் அரக்க புயலால்,
அலங்கோலமான
அவலம்தான் எண்ணச்சொல்ல ....

கொடூர தாக்குதலால்
புதுவை குப்பைமேடாய் ஆனதே ,...
கனவுபோன்ற நகரமின்று
கலை இழந்து போனதே ....

மா மதை பிடித்த
மனமில்லா காமுகன் போல்
புதுவையின் பொன்நெழிலை
சீரழித்தது  நன்செயலோ??????????????

தானே வந்த  தானேவெனும் புயல்
வீணே புதுவையின் அமைதியை குளைத்ததே
இருள் நீங்கியே  ஒளிபெறவேண்டுமே
இயற்கையின் சீற்றங்கள் இனி இலாதிருக்க
வேண்டுமே

2011 புயலை போன்ற
அதர்மங்கள் அறுக்கட்டும்,
அன்பும்,அமைதியும்
வரும் நாளில் பெருகட்டும்,,,  

Friday, 16 December 2011

காதலர்கள் என்பவர்கள்





காதலர்கள்
கற்பனையில் கயிறு திரிப்பவர்கள்

காதலர்கள்
வார்த்தையால் வானவில்லையும்
வலைக்ககூடியவர்கள்.......

காதலர்கள்
காதலுக்காக கல்லறையானவர்கள்........


காதலர்கள்
வானவில்லில் ஊஞ்சல்கட்டகூட
யோசிப்பவர்கள் ......

காதலர்கள்
பார்வையால்,"பா" பாடத்தெரிந்தவர்கள் ...


காதலர்கள்
வீண் புகழ்ச்சியை வீசத்தெரிந்தவர்கள்...

காதலர்கள்
வார்த்தை ஜாலங்களால்
வசீகரிக்கப்படுபவர்கள்...


காதலர்கள்
ஒருசில நிமிடங்களுக்குப்பின்
உறவை மறப்பவர்கள்...

காதலர்கள்
நடிப்பின் திலகங்கள்......

காதலர்கள்
இதயம் என்பது இல்லாதிருப்பவர்கள் .....

காதலர்கள்
இதயத்தை ஆயுதமின்றி
அடித்து நொறுக்குபவர்கள்....


காதலர்கள்
ஏமாற்றுவேலையின் இலக்கணம்
தெரிந்தவர்கள்.....

 காதலர்கள்
காலத்தை கழிப்பதில்
கவனமாய் இருப்பவர்கள்....

காதலர்கள்
காகித கப்பலை கடலில் விடுபவர்கள்....


காதலர்கள்
பொய்யில் புலவர்கள்....

காதலர்கள்
உண்மையின் உறைவிடங்கள்,....


காதலர்கள்
வாழ்வின் நிஜங்களை
உணர மறுப்பவர்கள்.....

























மகளீர்





மாநிலம் போற்ற
மண்ணில் பிறந்த மங்கையரே
 
மலர்கள் வாசம் தருவதால்-மகத்துவம்,

மரங்கள் நிழல் தருவதால்-தனித்துவம்,

பூமிக்கு பெருமையே-பொறுமை,

புறாவின் தன்மையோ-மேன்மை,

குயிலின் குரலுக்கு-இனிமை,

நிலாவின் ஒளியோ குளுமை,

இத்தனையும் ஒருங்கே பெற்ற-என்
அன்னை இனமே நீவீர்

ஞாலம் வென்று,சாதனை கண்டு ,
ஒவ்வொன்றிலும் வெற்றியே கண்டு

உன்னதமான உயர்வை தொட,
உளமார வாழ்த்துகின்றோம்

வாழ்க மகளீர் தினம்........
வளர்க அன்னையர் இனம் ........

Tuesday, 13 December 2011

எழுதுகோல்






என்னத்தை எழுத்தாக்க -நல்
வண்ணத்தை வரிகளாக்க
முக்காடு போட்டிருக்கும் -கொடுமையின்
முகத்திரையை கிழித்துக்காட்ட

வெண்சாமரம் வீசிக்கொண்டும்,
பன்னீரில் குளித்துக்கொண்டும்
சஞ்சாரம் செய்கின்ற -ஊழலை
வெளிச்சம் காட்ட

கண்ணீரை பயிராக்கி
செந்நீரை உரமாக்கி 
கண்ணீரில் தத்தளிக்கும் -உழைக்கும்
வர்க்கம் தலைநிமிர

வையம் வாழ்த்துப்பாட -மொழியில்
ஐயம் தீர்த்திடவே
மெய்யை உணர்த்திடவே -மொழி
மேன்மை அடைந்திடவே

எண்ணம் ஏற்றம்பெற -உலகில்
இன்னும் எவ்வளவோ
பண்ணும் பாங்கான -படைப்பே
எழுதுகோல் ////////////////

காதல் என்பது




காதல் என்பது
வேலையற்றவர்களின்,வேதனையை
மறக்கச்செய்யும் ,மருந்து.......

காதல் என்பது
கானல் நீர்.........

காதல் என்பது
சாதி,மதங்களை களையும்,
களைக்கொல்லி .........

 காதல் என்பது
கோழையையும்,வீரனாக்கும் விந்தை........


 காதல் என்பது
விட்டில்களை வீழ்த்தும்,விளக்கு..........

 காதல் என்பது
வரதச்சனையை  ஒழிக்கும்
வரப்பிரசாதம் ........

காதல் என்பது
சில கல்லறைகளின்,
காரணங்கள்,..........

காதல் என்பது
பெற்றவர்களை பித்தர்கலாக்கும்
எத்தர்கள் ........

காதல் என்பது
கருவறைகளை,கல்லறைகலாக்கும்,
கருணையற்றது,..........

Monday, 12 December 2011

கவிதை



உ ள்ளத்தின்    ஓசைகளை    உயிரூட்டி
வார்த்தைகளால்,கற்பனையால்,அலங்கரித்து
மொழியுனர்வால் ,கலைத்திறனால் மகுடமிட்டு,
எட்டுத்திக்கும் அறியும்படி முரசுக்கொட்டி,

எல்லோரும் ஏற்றமிகு வாழ்த்துப்பாட,
முத்தமிழில்    முக்கனிபோல்,சொல்லெடுத்து ,
கவர்ந்திழுக்கும்,கட்டழகு,பென்னைபோலும்,
களிரைக்கண்டு கலங்கிடாத ஆண்மைபோலும் ,

வளர்ந்துவரும் சந்ததிக்கு வழியும்காட்ட,
உயர்ந்து  நிற்கும் கலங்கரை விளக்குமாக,
வருந்திடும் வண்மைக்கு சாட்டையாக,
தொடர்ந்திடும்,வறுமைக்கு வேலியாக,

அழகுடைய மொழியுனர்வால் அலங்கரித்து
அகிலமே அறிந்திட எடுத்துக்காட்ட
ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைத்து
ஒப்பற்ற உயர்ந்த வழியுமாக,

கலாசசாரக்கருத்துகளை காத்திடவே
கருணையும்,கல்வியையும்,செழித்தோங்க
சிந்தனை தூரிகைளிருந்து சித்தரித்து,
தெளிக்கப்பட்ட முத்துக்களே,கவிதை ****************