Monday, 5 March 2012
Monday, 2 January 2012
தானே புயல்
புதுமை கண்ட புதுவை -பலருக்கு
புகலிடம் தந்த புதுவை
புதுமை கவிஜனாம் சுப்புரத்தினதாசனை
பூமிக்கு தந்த புதுவை
சுற்றுலா வந்தவரை சுண்டி
இழுத்த புதுவை
சுனாமி வந்த போதும் -மக்களை
சுணங்காமல் காத்த புதுவை
வங்க கடலோரம்
சிங்கம் போல் நின்ற புதுவை
மதங்கள் கடந்தே -நல
மனித நேயம் காத்த புதுவை
அழகு பதுமை போல
அற்புதமாய் அமைந்த புதுவை,
சுந்தர வீதிகளை
தன்னகத்தே கொண்ட புதுவை
சொல்லாலும்,மொழியாலும்,
ஒற்றுமையை கண்ட புதுவை,
எல்லோரும் வந்துச்செல்லும்,
எளிமையை கொண்ட புதுவை
ஆண்றோரையும், சான்றோரையும்,
அரவணைத்து நின்ற புதுவை
மதங்கள் பலவிறுந்தும்,
மாற்றமே இல்லா புதுவை
இத்தனை சிறப்பிருந்தும்
தானேவெனும் அரக்க புயலால்,
அலங்கோலமான
அவலம்தான் எண்ணச்சொல்ல ....
கொடூர தாக்குதலால்
புதுவை குப்பைமேடாய் ஆனதே ,...
கனவுபோன்ற நகரமின்று
கலை இழந்து போனதே ....
மா மதை பிடித்த
மனமில்லா காமுகன் போல்
புதுவையின் பொன்நெழிலை
சீரழித்தது நன்செயலோ??????????????
தானே வந்த தானேவெனும் புயல்
வீணே புதுவையின் அமைதியை குளைத்ததே
இருள் நீங்கியே ஒளிபெறவேண்டுமே
இயற்கையின் சீற்றங்கள் இனி இலாதிருக்க
வேண்டுமே
2011 புயலை போன்ற
அதர்மங்கள் அறுக்கட்டும்,
அன்பும்,அமைதியும்
வரும் நாளில் பெருகட்டும்,,,
Subscribe to:
Comments (Atom)


